Home
News

Airtel போட்ட போடு.. இனி ஆரம்பமே ரூ.379-க்கு.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. ஒரு மாத வேலிடிட்டி!

ஏர்டெல் கஸ்டமர்கள் இனிமேல் 2 ஜிபி டேட்டா கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், ஆரம்ப விலையே ரூ.379 ஆக இருக்கிறது. அதிகபட்சமாக ரூ.3599ஆக இருக்கிறது. இந்த விலைக்கு 30 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையில் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இந்த திட்டங்களில் கிடைக்கிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டாவுடன் ஏர்டெல் எந்தெந்த திட்டங்களை கொடுக்கிறது? இனிமேல் ரீசார்ஜ் செய்யும்போது எந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்? விவரங்கள் இதோ.

ஏர்டெல் ரூ 379 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 379 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஆரம்ப விலை 2 ஜிபி டேட்டா திட்டமாகும். ஆகவே, ஒரு மாத வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், ஹலோடியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகை இருக்கிறது.

Airtel போட்ட போடு.. இனி ஆரம்பமே ரூ.379-க்கு.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்!

ஏர்டெல் ரூ 398 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 398 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் மற்றம் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஹலோடியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகை கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 649 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 649 Prepaid Plan): இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. மேலும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இதுபோக எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, அப்பல்லோ 24/7 சர்க்கிள், ஹலோடியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகை இருக்கிறது.

ஏர்டெல் ரூ 979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தா உள்ளது. அப்பல்லோ 24/7 சர்க்கிள், ஹலோடியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலெர்ட் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1029 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளது. டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா உள்ளது. ரிவார்ட்ஸ் மினி, அப்பல்லோ 24/7 சர்க்கிள், ஹலோடியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகைகள் கிடைக்கின்றன.

ஏர்டெல் ரூ 3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரிக்கு 2 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே ஆப் இருக்கிறது. மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 379 Plan With Unlimited Voice Calls 2GB Data One Month Validity Entry Level 2GB Data Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X