Airtel-க்கு வேற ஆப்ஷனே இல்ல.. ஆரம்பமே ரூ.379-க்கு.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. வேலிடிட்டி?
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு வேறு ஆப்ஷனே இல்லாதபடி அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் (Unlimited 5G Data) கிடைக்கும் மலிவு விலை திட்டமாக ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) இருக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கும் இந்த திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம். அதோடு ஜியோ (Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களில் கிடைக்கும் மலிவு விலை 5ஜி திட்டங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் 5ஜி சேவை மற்றும் அதன் திட்டங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடிமட்ட விலையில் 5ஜி போன்கள் விற்கப்படுவதால், டெலிகாம் கஸ்டமர்கள் அதிகவேக இன்டர்நெட்டை பெறுவதற்கு 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு மாறி வருகின்றனர். இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி சேவையை கொடுக்கின்றன.

இதில் ஏர்டெல் நிறுவனம் மட்டுமே ரூ.379 ஆரம்ப விலையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தை கொடுக்கிறது. ஜியோவில் ரூ.198 விலைக்கும், வோடபோன் ஐடியாவில் ரூ.299 விலைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்கள் தொடங்குகின்றன. மற்ற நிறுவனங்களைவிட எப்படி விலை அதிகமாக இருக்கிறதோ அதேபோல சலுகைகளும் ஏர்டெல்லில் அதிகமாக இருக்கிறது.
ஏர்டெல் ரூ 379 திட்ட விவரங்கள் (Airtel Rs 379 Plan Details): ஏர்டெல்லில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்த வேண்டுமானால், கம்மியான விலையில் இதைவிட்டால் வேறு ஆப்ஷனே கிடையாது. இதற்கு அடுத்து ரூ.429 விலைக்கே அன்லிமிடெட் 5ஜி திட்டம் இருக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும்பட்சத்தில் ஒரு மாதம் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
இந்த ஒரு மாதம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதிகபட்சம் 300 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இது முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படும் டேட்டா சலுகையாகும். ஆகவே, திட்டத்துக்கான டேட்டாவை பார்க்கையில் நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதற்கு பிறகும் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.
ஆனால், இது 64 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற சலுகைகளை பார்க்கையில், வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி (Unlimited Local STD) & ரோமிங் கால்கள் (Roaming Calls) வருகிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகைகள் நாளொன்றுக்கு அனுப்ப கிடைக்கிறது. புதிதாக சேர்க்கப்பட்ட ஸ்பேம் அலெர்ட் சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
இப்போது, ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுடன் இந்த திட்டத்தை ஒப்பிட்டு பார்க்கலாம். ஜியோ நிறுவனத்தில் ரூ.198 விலைக்கே அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் கிடைக்கிறது. ஆகவே, ரூ.181 விலை குறைவாக கிடைக்கிறது. ஆனால், அதில் 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இருப்பினும், இதில் கிடைக்கும் 5ஜி டேட்டாவுக்கு கேப் கிடையாது.
அதாவது, ஏர்டெல்லில் மாதத்துக்கு அதிகபட்சம் 300 ஜிபி டேட்டாவை 5ஜி சேவையில் பயன்படுத்தலாம். ஆனால், ஜியோவில் அப்படி டேட்டா கேப் கிடையாது. எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, 2 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன.
வோடபோன் ஐடியாவில் ரூ.299 விலையில் அன்லிமிடெட் 5ஜி திட்டம் தொடங்குகிறது. இதில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வருகிறது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் முந்தைய திட்டங்களை போலவே இருக்கின்றன. இந்த சலுகைகளின் அடிப்படையில் நீங்களே பெஸ்ட்டை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








