Airtel-க்கு மினிமம் இதுதான்.. இனிமே ரூ.379 கொடுங்க.. 1 மாத வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!
இந்தியாவின் 2ஆவது மிகப்பெரிய டெலிகாம் (Telecom) நிறுவனமான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) கட்டண உயர்வுக்கு (Tariff Hikes) பிறகு கஸ்டமர்களுக்கு வழங்கும் மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களில் (Monthly Prepaid Plans) பல்வேறு மாற்றங்களை சத்தமில்லாமல் செய்துள்ளது. இப்போது, 1 மாத வேலிடிட்டிக்கு மினிமம் ரூ 379 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேபோல 3 திட்டங்களில் மட்டுமே 1 மாத வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் நிறுவனமானது, ஒரு மாத வேலிடிட்டியில் (1 Month Validity) 3 திட்டங்களை மட்டுமே கொடுக்கிறது. மினிமம் ரூ 379 முதல் திட்டங்கள் தொடங்குகிறது. இதற்கு மேலாக ரூ 429 மற்றும் ரூ 690 விலையில் கிடைக்கும் திட்டங்களை மட்டுமே கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். முதலில் மினிமம் திட்டத்தின் சலுகைகளை பார்த்து விடுவோம்.

ஏர்டெல் ரூ 379 திட்ட விவரங்கள் (Airtel Rs 379 Plan Details): இந்த மினிமம் மாதாந்திர திட்டத்துக்கு (Minimum Monthly Plan) அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. 2 ஜிபி தினசரி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது. மேலும், விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடையாது. 1 மாதத்துக்கு சர்வீஸ் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ 429 திட்ட விவரங்கள் (Airtel Rs 429 Plan Details): இந்த மாதாந்திர திட்டத்தில் கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2.5 ஜிபி டேட்டா தினசரிக்கு வழங்கப்படுகிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் ரூ 5 டாக்டைம் கொடுக்கப்படுகிறது.
முன்பு பார்த்த திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. மேலும், 100 எஸ்எம்எஸ் சலுகையும் நாளொன்றுக்கு கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா, விங்க் மியூசிக் மற்றும் ஹலோ டியூன்ஸ் சலுகை வருகிறது. இதுபோக அப்பல்லோ 24/7 சர்க்கிள் சந்தா கொடுக்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ 690 திட்ட விவரங்கள் (Airtel Rs 690 Plan Details): முந்தை திட்டங்களை போலல்லாமல், இந்த 1 மாத திட்டத்தில் பல்க் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதாவது, தினசரி லிமிட் இல்லாமல் டேட்டா சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கவில்லை. இருப்பினும், கட்டுப்பாடு இன்றி தேவைக்கு ஏற்ப டேட்டாவை பயன்படுத்தலாம்.
இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 60 ஜிபி டேட்டா மொத்தமாக கொடுக்கப்படுகிறது. இதை வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 60 ஜிபிக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணமாக கொடுக்க வேண்டும். அதேபோல 300 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக வருகிறது.
இதனால், 1 மாத வேலிடிட்டியில் அதை பயன்படுத்திவிட்டால், அதற்கு பிறகு லோக்கல் எஸ்எம்எஸ்களுக்கு ரூ.1 மற்றும் எஸ்டிடி எஸ்எம்எஸ்களுக்கு ரூ.1.5 கட்டணமாக எடுக்கப்படும். இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அப்பல்லோ 24/7 சர்க்கிள், விங்க் மியூசிக் மற்றும் ஹலோ டியூன்ஸ் சலுகைகளை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








