Home
News

டக்குனு ரீசார்ஜ் பண்ணுங்க.. ரூ.379-க்கு மொத்தமாக முடிஞ்சிரும்.. இனி வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா மட்டுமில்ல?

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ரூ.379 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், இப்போது பெஸ்டிவ் ஆஃபராக கூடுதலாக பல்வேறு சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) முதல் கூகுள் ஒன் முதல் கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) வரையில் சலுகைகள் இதில் இருக்கின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 379 திட்ட விவரங்கள் (Airtel Rs 379 Plan Details): இந்த திட்டத்துக்கு வழக்கமாக கிடைக்கும் சலுகைகளை பார்க்கையில், 1 மாத வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, எந்த தேதியில் ரீசார்ஜ் செய்யப்படுகிறதோ அடுத்த மாதம் அதே வரையில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கொடுக்கப்படும். 2 ஜிபி டேட்டா நாளொன்றுக்கு பயன்படுத்த கிடைக்கிறது.

டக்குனு ரீசார்ஜ் பண்ணுங்க.. ரூ.379-க்கு மொத்தமாக முடிஞ்சிரும்!

இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகையும் கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது. ஆகவே, இதில் டேட்டா வவுச்சர்களுக்கு தேவை இருக்காது, திட்டத்தின் டேட்டாவே போதுமானாதாக இருக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் நாளொன்றுக்கு அனுப்ப கிடைக்கின்றன. மேலும், ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை கொடுக்கப்படுகிறது. ஆனால், 30 நாட்களுக்கு ஒரு டியூன் மட்டுமே வைத்து கொள்ள முடியும். இதுபோக ஸ்பேம் அலெர்ட் (Spam Alert) சலுகை கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வரும் இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் இருக்கும் ஸ்பேம்களை டிடெக்ட் செய்து கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் மட்டுமே இந்த திட்டத்துக்கு வழக்கமா கிடைக்கும் சலுகைகளாக இருக்கிறது. இப்போது, கூடுதல் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் கூகுள் ஒன் (Google One) மூலமாக 30 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

இதை வழக்கமாக கிளவுட் ஸ்டோர்ஜ் போல பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஆப்பிள் மியூசிக் (Apple Music) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இறுதியாக அண்மையில் சேர்க்கப்பட்ட பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இதை 12 மாதங்களுக்கு ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகளே கிடைக்கின்றன.

இதேபோல சலுகைகளுடன் கூடுதலாக ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் வேண்டுமானால், மற்றொரு திட்டம் ஆப்ஷனில் இருக்கிறது. ஆனால், வேலிடிட்டி மற்றும் தினசரி டேட்டா மட்டும் கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால், அதற்கு ஏற்ப விலையும் குறைவாகவே இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 349 திட்ட விவரங்கள் (Airtel Rs 349 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும்.

மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஆப்பிள் மியூசிக், ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. ஓடிடி சலுகையை பார்க்கையில், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இதில் சோனிலிவ், லயன்ஸ்கேட் பிளே, ஆஹா மற்றும் சன்நெக்ஸ்ட் போன்ற ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 379 Plan With Unlimited Voice 2GB Data 1 Month Validity Google One 30GB Cloud Storage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X