Airtel போட்ட போடு.. செப்.11-க்குள் ரீசார்ஜ்.. 365 நாட்கள் திட்டம் வரை.. இலவச டேட்டா.. ஓடிடி சந்தா.. 3 திட்டம்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மட்டும்தான் கொடுக்குமா? நாங்க கொடுக்க மாட்டோமா? என்பது போல பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் பண்டிகை கால சலுகைகளை (Airtel Festive Offer) அறிவித்துள்ளது. செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு இலவச டேட்டா, ஓடிடி மற்றும் வேலிடிட்டி என்று சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் இந்த இலவச சலுகையை பெறலாம். ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்தாலும் கொண்டாட்டம்தான்.
ஜியோ நிறுவனத்தின் 8ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதனால் ஜியோ கஸ்டமர்கள் கட்டண உயர்வுக்கு பிறகு நீண்ட நாட்களில் கழித்து குஷியாகி விட்டனர். இதனால், போட்டி நிறுவனமான ஏர்டெல் புது ஆஃபரை அறிவித்து தனது கஸ்டமர்களையும் குதூகலப்படுத்தி இருக்கிறது.

எந்தெந்த திட்டங்களில் சலுகை? ஏர்டெல் ரூ.979 திட்டம் (Airtel Rs 979 Plan), ஏர்டெல் ரூ.1029 திட்டம் (Airtel Rs 1029 Plan) மற்றும் ஏர்டெல் ரூ.3599 திட்டம் (Airtel Rs 3599 Plan) ஆகிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு இப்போது இலவச டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே சலுகை கிடைக்கும்.
என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? மேற்கண்ட திட்டங்களில் ரூ.979 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அந்த திட்டங்களின் சலுகைகள் போக கூடுதலாக 10 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். இந்த 10 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்குள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதே டேட்டாவுடன் 22+ ஓடிடி சந்தா வேண்டுமானல், அடுத்த 2 திட்டங்களுக்கு செல்லுங்கள்.
அதாவது, ஏர்டெல் ரூ.1029 திட்டம் அல்லது ஏர்டெல் ரூ.3599 திட்டம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்தாலும், அந்த திட்டத்தின் சலுகைகள் மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா மூலம் 22+ ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. அதேபோல 10 ஜிபி டேட்டாவையும் இலவசமாக பெற்று கொள்ளலாம்.
இந்த ஓடிடி சந்தாவில் சோனிலிவ் (SonyLIV), ஈராஸ் நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), ஃபேன் கோட் (Fan Code), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix), மனோரமா மேக்ஸ் (Manorama Max), எபிக் ஆன் (Epic On), கிளிக் (Klikk), ஹங்கமா (Hungama) மற்றும் சோஷியல் ஸ்வாக் (Social Swag) ஆப்களை பயன்படுத்தலாம்.
மேலும், கான்ச்சா லங்கா (Kanccha Lanka), ஹோய்சோய் (HoiChoi), டாகுபே (Docubay), சாவ்பால் (Chaupal), ஷீமாரூமீ (Shemaroome), டிவோ (DIVO), டாலிவுட்பிளே (Dollywood Play) மற்றும் அல்ட்ரா (Ultra) ஆகிய ஓடிடி சந்தாவும் கிடைக்கிறது. மேற்கண்ட மூன்று திட்டங்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன.
அதேபோல டேட்டாவும் நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் கிடைக்கிறது. ஆனால், வேலிடிட்டியில் மாற்றம் இருக்கிறது. ஆகவே, ஏர்டெல் ரூ.979 மற்றும் ஏர்டெல் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டங்களில் 84 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இதுபோக கூடுதல் சலுகைகளும் இருக்கின்றன.
அதாவது, ரூ.1029 திட்டத்தில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. மற்றபடி மூன்று திட்டங்களிலும் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் கிடைக்கிறது. இதை மூன்று மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ரிவார்ட்ஸ் மினி (RewardsMini) சந்தா மற்றும் ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) சந்தாவும் கொடுக்கப்படுகிறது. பண்டிகை கால சலுகைகளை பெற குறிப்பிட்ட தேதிக்குள் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications