Home
News

ஏர்டெல்லுக்கு கும்பிடு.. ரூ.300-க்கு இறங்கிடுச்சு.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24GB டேட்டா!

இனிமேல் ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் ஒரு வருடத்துக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) கண்ணை மூடிக்கொண்டு தேர்ந்தெடுக்கலாம். மாதத்துக்கு வெறும் ரூ.300 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 2 ஜிபி டேட்டா (2GB Data) மட்டுமல்லாமல், 365 நாட்கள் வேலிடிட்டி (365 Days Validity) கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதலாக பல்வேறு சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இந்த ஏர்டெல் வருடாந்திர திட்டத்தின் (Airtel Yearly Plan) விவரங்கள் இதோ.

ஏர்டெல் நிறுவனத்தின் கட்டண உயர்வுக்கு பிறகு இந்த திட்டத்தையே அதிக கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ஏனென்றால், டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற வழக்கமான சலுகைகளுடன் ஓடிடி ஆப்களின் சலுகை கொடுத்துள்ளது. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), அப்பல்லோ 24|7 சர்க்கிள் சந்தா போன்றவையும் வருகின்றன.

ஏர்டெல்லுக்கு கும்பிடு.. ரூ.300-க்கு இறங்கிடுச்சு.. 365 நாட்கள் சேவை!

ஏர்டெல் ரூ 3599 திட்ட விவரங்கள் (Airtel Rs 3599 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது.

ஆகவே, 730 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். முக்கிய சலுகையான வாய்ஸ் கால்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது.

இந்த சலுகைகள் போக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xtream App) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தா மூலம் டிவி ஷோக்கள், மூவிக்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதுபோக ஏர்டெல்லில் பிரத்யேகமாக கிடைக்கும் சலுகைகள் இருக்கின்றன. அதாவது, 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் வருகிறது.

மேலும், விங்க் மியூசிக் (Wynk Music) சலுகையை பெறலாம். இதுபோக ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக எந்தவொரு ஆப் சப்போர்ட் இல்லாமலும், ஸ்பேம் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை தடுக்கிறது. இப்படி பல்வேறு சலுகைகளை கொடுத்து பட்டையை கிளப்பி இருக்கிறது. இதைவிட மலிவான வருடாந்திர திட்டம் பின்வருமாறு.

ஏர்டெல் ரூ 1999 திட்ட விவரங்கள் (Airtel Rs 1999 Plan Details): இந்த ஏர்டெல் வருடாந்திர திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், டேட்டா சலுகை எதிர்பார்க்க முடியாது. அதாவது, 365 நாட்களுக்கும் 24 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இதற்கு மேல் டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால், மற்ற சலுகைகளில் குறையில்லை.

அதாவது, டேட்டாவை தவிர வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. ஆகவே, இந்த ரூ 1999 திட்டத்தை பெறும் கஸ்டமர்கள் வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும். அதேபோல தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் செய்து கொள்ளலாம்.

இதுபோக முந்தைய வருடாந்திர திட்டத்தில் கிடைத்ததை போலவே அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா கிடைக்கிறது. அதேபோல விங்க் மியூசிக் (Wynk Music), ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு மாதம் வெறும் ரூ 166 மட்டுமே செலவாகிறது. இரண்டு திட்டங்களும் நல்ல சலுகைகளை கொடுக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 3599 Plan With Unlimited Voice Calls 2GB Daily Data 365 Days Validity Check One Year Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X