Airtel சிம் இருக்கா.. ரூ.300 செலவுல இதை பண்ணுங்க.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
மாதத்துக்கு ரூ.300 செலவு செய்ய ரெடியாக இருக்கும் ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் தினசரி எஸ்எம்எஸ்களை (Daily SMS) கொடுக்கும் சரியான திட்டம் இருக்கிறது. இந்த ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3,599 விலை கொண்ட திட்டத்தையே இப்போது பார்க்க இருக்கிறோம். இந்த திட்டத்துக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மாத செலவை கணக்கிட்டு பார்த்தால் ரூ.299 மட்டுமே தேவைப்படும். ஆகவே, மாதத்துக்கு ரூ.300 செலவு செய்ய ரெடியாக இருக்கும் கஸ்டமர்கள் இதை ரீசார்ஜ் செய்தால், அதிக சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

இந்த திட்டத்தை இப்போதே ரீசார்ஜ் செய்வது சரியாக இருக்கும். ஏனென்றால், டெலிகாம் நிறுவனங்கள் மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு இருக்கின்றன. ஆகவே, வருடாந்திர திட்டங்களின் விலையில் அல்லது சலுகையில் மாற்றம் செய்யப்பட்டலாம். இப்போது, கிடைக்கும் சலுகைகள் அப்போது குறைவாக கிடைக்கும் அல்லது அதிக விலைக்கு கிடைக்கும்.
இதேபோலத்தான கடந்து முறை ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதும் நடந்தது. அப்போது, சில கஸ்டமர்கள் வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களை முன்கூட்டியே பெற்றுவிட்டனர். ஆகவே, நீங்களும் புத்திசாலி தனமாக ரீசார்ஜ் செய்ய ரெடியாக இருந்தால், இந்த திட்டத்தை பெற்று கொள்ளுங்கள். மாதத்துக்கு ரீசார்ஜ் போதுமானால், வழக்கம்போல ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
ஏர்டெல் ரூ 3599 திட்ட விவரங்கள் (Airtel Rs 3599 Plan Details): இந்த ஒரு வருட திட்டத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை ஆகியவை கொடுக்கப்படும்.
ஆகவே, முதலில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் செய்ய கிடைக்கும். 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆனால், 100 எஸ்எம்எஸ்களுக்கு பிறகு கட்டணம் செலுத்தி அனுப்ப வேண்டி இருக்கும்.
இந்த 2 ஜிபி டேட்டாவானது, 4ஜி வேகத்தில் மட்டுமே கொடுக்கப்படும். ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா முற்றிலும் இலவமாக கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும். இந்த சலுகைகளுக்கு அடுத்து 12 மாதங்கள் பயன்படுத்தும்படி பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கொடுக்கப்படுகிறது. வருடம் முழுவதும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.
இந்த திட்டம் தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் வருடாந்திர திட்டமாக இருக்கிறது. ஒருவேளை வாய்ஸ் கால்கள் மட்டுமே போதுமானால், மற்றொரு வருடாந்திர திட்டம் மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.1849ஆக இருக்கிறது. இதில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் முந்தைய திட்டத்தில் பார்த்த கூடுதல் சலுகைகள் கொடுக்கப்படும்.
ஏர்டெல் ரூ 1849 திட்ட விவரங்கள் (Airtel Rs 1849 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ப்ரீ ஹலோ டியூன்ஸ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது. ஆனால், டேட்டா மட்டும் கொடுக்கப்படாது.
வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் போதுமென்றால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா வேண்டுமானால், முதலில் பார்த்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதில் வாய்ஸ் கால்கள் மட்டுமே கொண்ட திட்டத்தின் விலை உயர்த்தப்பட வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications








