Airtel-னா.. ஐயா கில்லிடா.. மாதாந்திரம் ரூ.200 கூட இல்ல.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வருடாந்திர சேவை திட்டங்கள்!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் அறக்க பறக்கும் விதமாக போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid Plans) மாற்றம் செய்யப்பட்டன. இப்போது, வருடாந்திர திட்டங்களை (Yearly Plan) ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கம்மியான செலவில் சலுகைகளை பெற முடிகிறது. இப்போது, ஏர்டெல்லில் மாதத்துக்கு ரூ.200-க்கும் குறைவான செலவில் கிடைக்கும் வருடாந்திர திட்டம் முதல் ரூ.300-க்கும் மேலான செலவில் கிடைக்கும் வருடாந்திர திட்டங்கள் வரையில் கஸ்டமர்களுக்கு கிடைக்கின்றன. இதில் எந்த திட்டம் நல்ல சலுகைகளை கொண்டிருக்கிறது என்பதை விரிவாக பார்ப்போம்.
ஏர்டெல் ரூ 1999 திட்ட விவரங்கள் (Airtel Rs 1999 Plan Details): ஏர்டெல்லில் மிகவும் மலிவான விலைக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டம் இதுவாகும். ஆனால், இந்த திட்டத்தில் தினசரி டேட்டா சலுகை கிடைக்காது. இருப்பினும், 24 ஜிபிக்கான லம்ப்-சம் டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

இந்த 365 நாட்களில் 24 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டிருக்கிறது. இதுபோக வருடாந்திர திட்டங்களில் வழக்கமாக கிடைக்கும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது.
அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் ஏர்டெல்லின் கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு மாதம் ரூ.166 மட்டுமே செலவாகிறது.
ஏர்டெல் ரூ 3599 திட்ட விவரங்கள் (Airtel Rs 3599 Plan Details): முந்தைய திட்டத்தை போலல்லாமல், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தில் 365 நாட்களும் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். அதேபோல பேர் யூசேஜ் பாலிசி டேட்டாவும் கிடைக்கிறது.
ஆகவே, இந்த வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. இதுபோக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடிகிறது. இதை 2 ஜிபிக்கு பிறகு ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதர சலுகைகளை பார்க்கையில், முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகளை பெற்று கொள்ள முடியும். மேலும், 100 எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா, விங்க் மியூசிக் மற்றும் ஹாலோ டியூன்ஸ் சலுகைகளும் பயன்படுத்த கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 3999 திட்ட விவரங்கள் (Airtel Rs 3999 Plan Details): முந்தை திட்டங்களைவிட கூடுதல் டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி சலுகைகளும் வேண்டுமானால், ஏர்டெல் கஸ்டமர்கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால், இந்த வருடாந்திர திட்டத்தில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா சலுகையை பெறலாம்.
மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் டேட்டா கிடைக்கும். இதுபோக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை, 100 எஸ்எம்எஸ் சலுகை, அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா, விங்க் மியூசிக் மற்றும் ஹாலோ டியூன்ஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
இந்த பேசிக் சலுகைகள் போக ஓடிடி சலுகை கிடைக்கிறது. ஆகவே, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தாவை பெற்று கொள்ளலாம். இந்த சந்தாவை 1 வருடத்துக்கு பெற்றுக் கொள்ளலாம். ரூ.499 மதிப்பிலான இந்த சலுகை இலவசமாக கிடைக்கிறது. இந்த 3 ப்ரீபெய்ட் திட்டங்களே வருடாந்திர திட்டங்களாக கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








