மறுபடியும் ரூ.300-க்கு.. 365 நாட்களை இறக்கிய Jio, Airtel.. இனிமே மாத செலவுல வாய்ஸ் கால்கள், 5ஜிக்கு போட்டி!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களிடையே 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை கொடுப்பதில் வந்துள்ள போட்டியானது, கஸ்டமர்களுக்கு அதிகப்படியான சலுகைகளை கொடுக்கிறது. வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தால் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்க முடியாததால், இப்போது மாதத்துக்கு ரூ.300 மட்டுமே செலவாகும் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் 5ஜி டேட்டா (5G Data) கொடுக்க தொடங்கிவிட்டன. இந்த வருடாந்திர திட்டங்களில் வேல்யூ கொடுக்கும் திட்டத்தை பார்ப்போம்.
டெலிகாம் கஸ்டமர்கள் 4ஜிக்கு அடுத்து 5ஜிக்கு மாற தொடங்கிவிட்டனர். இதனால், 5ஜி டேட்டாவுக்கான திட்டங்கள் மீது டெலிகாம் மார்கெட்டின் கவனம் சென்றுள்ளது. ஆனால், முன்னணி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல்லில் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. போட்டி நிறுவனமான வோடபோன் ஐடியாவிடம் அன்லிமிடெட் 5ஜி திட்டங்கள் இருக்கவில்லை.

ஆகவே, இருமுனை போட்டியாக ஜியோ, ஏர்டெல் திட்டங்களை கொடுக்கின்றன. இதில் வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் ரூ.3599 மதிப்பிலான திட்டத்தை 2 நிறுவனங்களும் வைத்திருக்கின்றன. ஒரே விலைக்கு இந்த திட்டங்கள் கிடைத்தாலும், அதில் எது வேல்யூ கொடுக்கும் திட்டம் எது என்பதை பார்க்க வேண்டும். ஏனென்றால், மாதத்துக்கு ரூ.300 செலவில் இந்த 2 திட்டங்களும் வருகின்றன.
ஏர்டெல் ரூ 3599 திட்டம் Vs ஜியோ ( Airtel Rs 3599 Plan Vs Jio): இந்த வருடாந்திர திட்டங்களில் (Yearly Plans) அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), தினசரி 4ஜி டேட்டா (Daily 4G Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) ஆகிய சலுகைள் பொதுவாகவே இருக்கின்றன. ஆனால், 4ஜி டேட்டாவில் கூடுதல் மற்றும் குறைகள் இருக்கின்றன.
அதாவது, ஏர்டெல் நிறுவத்தின் ரூ.3599 மதிப்பிலான திட்டத்தில் 4ஜி டேட்டாவானது, நாளொன்றுக்கு 2 ஜிபி மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஜியோ நிறுவனத்தில் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, தினமும் 500 எம்பி டேட்டாவை 365 நாட்களுக்கு கூடுதலாக ஜியோவில் பெற்று கொள்ளலாம். இதில் ஜியோ ஏர்டெல்லை கொஞ்சம் முந்தி இருக்கிறது. 5ஜியில் சரிசமமாக இருக்கின்றன.
மேலும், தினசரி டேட்டாவுக்கு பிறகு கிடைக்கும் போஸ்ட் டேட்டா சலுகையானது, 64 கேபிபிஎஸ் வேகத்தில் 2 நிறுவனங்களிலும் கிடைக்கிறது. அடுத்ததாக அனைத்து நெட்வொருக்கிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் ஒரே மாதிரியாகவே கிடைக்கின்றன.
இப்போது, கூடுதல் சலுகைகளை பார்த்துவிடுவோம். ஏர்டெல், ஜியோ நிறுவனங்களில் பிரத்யேக சலுகைகள் இருக்கின்றன. இதை ஒப்பிட முடியாது. இருப்பினும், எது வேல்யூ என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். அதாவது, ஏர்டெல்லில் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle), விங்க் மியூசிக் (Wynk Music) சலுகை கிடைத்தால், ஜியோவில் ஜியோசினிமா (Jio Cinema) மற்றும் ஜியோடிவி (Jio TV) கிடைக்கிறது.
ஏர்டெல்லிலும் ஓடிடி சலுகைக்காக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xtream App) சந்தா கிடைக்கிறது. ஆனால், ஜியோசினிமா மற்றும் ஜியோடிவி அல்லது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் ஆகிய எதிலும் பிரீமியம் சலுகைகள் கிடைக்காது. ஆகவே, டேட்டாவில் ஜியோ ஏர்டெல்லை முந்துகிறது. ஆனால், 5ஜி டேட்டா கிடைப்பதால், அது எடுபடாது. இருப்பினும், 5ஜிக்கு கட்டணம் இருந்தால், ஜியோ பெஸ்ட் திட்டமாகும். அதே போலஜியோ கிளவுட் (Jio Clound) கூடுதலாக கிடைக்கும் சலுகையாகும்.


Click it and Unblock the Notifications








