ஏர்டெல் போட்ட போடு.. மாசம் ரூ.300-க்கு கதை முடிஞ்சு.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மாதத்துக்கு ரூ.300 செலவில் வருடம் முழுவதும் வேலிடிட்டி மட்டுமல்லாமல், தினசரி டேட்டா (Daily Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் கிடைக்கிறது. இந்த சலுகைகள் போதாது என்று கூடுதலாக பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பார்க்கப் போகும் திட்டம் மாதத்துக்கு ரூ.300 செலவில் கிடைக்கிறது. ஆனால், வெறும் ரூ.300 மட்டுமே செலுத்தி ரீசார்ஜ் செய்ய முடியாது. அதாவது, 12 மாதங்களுக்கு சேர்த்து (மாதம் ரூ.300 வீதம்) கிடைக்கும் வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போது மட்டுமே இந்த விலைக்கு கிடைக்கும். ஏனென்றால், வருடாந்திர திட்டத்தில் மட்டுமே மாத செலவு மலிவாக இருக்கிறது.

ஏர்டெல் ரூ 3599 திட்டத்திலும் அதேபோல மலிவான விலைக்கு அதிக சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு வருடம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. இதுபோக தினசரி டேட்டாவும் கிடைக்கிறது. ஆகவே, ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்கள் ஏற்ப டேட்டா சலுகை அதிகமாகவே கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 3599 திட்ட விவரங்கள் (Airtel Rs 3599 Plan Details): 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்துக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவை 4ஜி வேகத்தில் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால், இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இருப்பதால், அந்த சலுகையை பெறும் கஸ்டமர்களுக்கு 4ஜி டேட்டா தேவைப்படாது.
4ஜி டேட்டா மட்டும் 730 ஜிபி கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கிறது. அப்படியும் கிடைக்காத நேரத்தில் 4ஜி டேட்டாவே போதுமானதாக இருக்கும். இந்த டேட்டா சலுகைகளுடன் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதை 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு மட்டுமே பயன்படுத்த முடியும்.
அதாவது, தினசரி டேட்டா முடிந்தாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சேவை கொடுக்கப்படும். இந்த டேட்டா சலுகையை போலவே வாய்ஸ் கால்களின் சலுகையும் அதிகப்படியாக கிடைக்கிறது. 12 மாதங்கள் முழுவதும் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும்.
இந்த டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுக்கு அடுத்து முக்கிய சலுகையாக எஸ்எம்எஸ் சலுகைகள் இருக்கிறது. இதை நாளொன்றுக்கு 100 என்னும் வரம்பில் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த வரம்பு முடிந்த பிறகு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த மூன்று முக்கிய சலுகைகளுக்கு அடுத்து ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை வருகிறது.
இந்த ஹலோ டியூன்ஸ் சலுகை மூலம் 30 நாட்களுக்கு ஒரு முறை டியூனை மாற்றி கொள்ளலாம். அடுத்து வழக்கமாக கிடைக்கும் ஸ்பேம் அலெர்ட் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகை மூலம் இன்கம்மிங் வாய்ஸ் கால்கள், இன்கம்மிங் எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றில் ஸ்பேம் இருந்தால், அதை அலெர்ட் செய்யும்படியான சலுகையை இது கொடுக்கிறது.
இந்த சலுகைகள் மட்டுமே இதுவரையில் கிடைத்து வந்தது. ஆனால், லேட்டஸ்ட்டாக மற்றொரு சலுகை இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சலுகையை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இந்த சலுகைக்கும் 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, திட்டத்தையும் பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோவையும் வருடம் முழுவதும் பெறலாம்.


Click it and Unblock the Notifications