ஒரே ஒரு முறை Airtel ரீசார்ஜ்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. ஓடிடி.. வாய்ஸ் கால்கள்.. தினசரி டேட்டா.. எந்த திட்டம்?
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஓடிடி சந்தாவுடன் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. குறிப்பாக இது போன்ற ஓடிடி சந்தா திட்டங்களை தான் அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக ஓடிடி நன்மை உடன் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா, உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
குறிப்பாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும். மேலும் இந்நிறுவனம் வைத்துள்ள ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) ஒரு வருடம் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதுவும் ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் 1 வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவை வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் வழங்கப்படுகிறது.

இதுதவிர Adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம், இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.
குறிப்பாக இந்த அதிக டேட்டா, ஓடிடி மற்றும் ஒரு வருடம் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.3599 மற்றும் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








