Airtel-க்கு கும்பிடு.. மாதாந்திரம் ரூ.300-க்கு கீழ 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2ஜிபி டேட்டா!
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) உத்தரவுபடி வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய திட்டங்கள் கிடைத்தாலும், மாதத்துக்கு ரூ.300-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் இந்த ஏர்டெல் வருடாந்திர திட்டத்துக்கு (Airtel Yearly Plan) துளியும் மவுசு குறையவில்லை. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் ஓடிடி சலுகையை இந்த திட்டம் வருடம் முழுவதும் கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்கள் இதோ.
ஏர்டெல் கஸ்டமர்களுக்கு இப்போது ரூ.1798 பட்ஜெட் முதல் வருடாந்திர திட்டங்கள் கிடைக்கிறது. ஆனால், அதில் டேட்டா சலுகைகள் முற்றிலும் கிடையாது. சரி, லம்ப்-சம் டேட்டாவுடன் திட்டம் இருக்கிறதா? என்று பார்த்தால், 30 ஜிபி டேட்டாவுடன் ரூ.2249 விலைக்கு மற்றொரு வருடாந்திர திட்டம் இருக்கிறது. இந்த 30 ஜிபி டேட்டாவுக்கு மட்டுமே முந்தைய திட்டத்தைவிட ரூ.451 விலை அதிகமாக இருக்கிறது.

ஏனென்றால், இப்போது கஸ்டமர்களிடையே டேட்டாவின் முக்கியத்துவம் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இதனாலேயே டேட்டா திட்டங்களில் இவ்வளவு விலை மாற்றங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த திட்டங்களை தூக்கி சாப்பிடும்படி ஏர்டெல் ரூ 3599 திட்டம் (Airtel Rs 3599 Plan) கஸ்டமர்களுக்கு இருக்கிறது. இதில் டேட்டாவை பற்றிய கவலையே துளியும் இருக்காது. அப்படி என்னென்ன சலுகைகள் இருக்கிறது?
ஏர்டெல் ரூ 3599 திட்ட சலுகைகள் (Airtel Rs 3599 Plan Offers): இந்த திட்டத்தில் வருடம் முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். அதாவது, 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகை மட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையையும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
ஆகவே, 4ஜி வேகத்தில் 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் பயன்படுத்த கிடைக்கிறது. இதனால், ஓடிடி மற்றும் ஆன்லைன் கேமிங் பிரியர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் தவிர்க்க முடியாத ஆப்ஷனாக இருக்கிறது. ஓடிடி பக்கம் பார்க்கையில், இந்த வருடாந்திர திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xtream App) பயன்படுத்த கிடைக்கிறது. ஆனால், இலவச கன்டென்ட்களை மட்டுமே இது கொடுக்கும்.
இந்த சலுகைகள் போக 365 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களையும் (Roaming Voice Calls) ஏர்டெல் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். அவ்வளவுதான் சலுகைகள் இருக்கிறதா என்றால், அதுதான் இல்லை. கூடுதலாக பல்வேறு சலுகைகள் இதில் இருக்கின்றன. இவை ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கின்றன.
ஆகவே, 365 நாட்கள் முழுவதும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வரும் இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் ஸ்பேம் அலெர்ட் (Spam Alert) சலுகை கொடுக்கப்படுகிறது. இதற்காக எந்தவித கட்டணத்தையும் ஏர்டெல் நிறுவனம் வசூலிக்காது. மேலும், அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகைகளை பயன்படுத்த கொடுக்கிறது. இதில் அப்பல்லோவுக்கு வேலிடிட்டி உள்ளது.
அதாவது, இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், அப்பல்லோ 24/7 சர்கிள் மெம்பர்ஷிப்பை 3 மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இவ்வளவு சலுகைகளையும் மாதத்துக்கு வெறும் ரூ.299 செலவில் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் கொடுக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வருடம் முழுவதும் விரும்பும் கஸ்டமர்கள் இப்போதே இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications