Home
News

புது ஆஃபர்.. மாதாந்திரம் ரூ.300-க்கு கம்மி.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. Airtel யூசர்கள் குஷி!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தின் கட்டண உயர்வால் கடுப்பில் இருந்த கஸ்டமர்கள் கூட பரவால்லையே என்று சொல்லும்படி மாதாந்திரம் ரூ.300-க்கும் கம்மியான கட்டணம் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daliy Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் மட்டுமல்லாமல், 22+ ஓடிடி சந்தாவும் (OTT Subscription) இலவசமாக களமிறக்கப்பட்டுள்ளது. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் (Airtel Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி தவிர மற்ற அனைத்து சலுகைகளும் கொடுக்கப்பட்டன. இப்போது, புதிய சலுகையாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறுகிய கால சலுகை மட்டுமே. ஆகவே, உடனடியாக ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். முதலில் திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம்.

புது ஆஃபர்.. மாதாந்திரம் ரூ.300-க்கு கம்மி.. 365 நாட்கள் வேலிடிட்டி!

ஏர்டெல் ரூ 3599 திட்ட விவரங்கள் (Airtel Rs 3599 Plan Details): இந்த ஏர்டெல் திட்டத்தில் (Airtel Plan) அதிகப்படியான சலுகைகள் கிடைக்கின்றன. சொல்லப்போனால், டேட்டாவை பற்றிய கவலையே இந்த திட்டத்தில் இருக்காது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 365 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை பெறலாம்.

இந்த 2 ஜிபி டேட்டாவை அன்றைய நாளில் முழுவதும் பயன்படுத்திய பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகைகள் நாளொன்றுக்கு கிடைக்கிறது. வாய்ஸ் கால்களுக்கு பஞ்சமில்லை, 365 நாட்களுக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.

மேலும், ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் கிடைக்கிறது. மேலும், மூன்று மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் கிடைக்கிறது. அதேபோல விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகை யை பெற்று கொள்ளலாம். இந்த சலுகை மட்டுமே செப்டம்பர் 6ஆம் தேதி முன்பு வழங்கப்பட்டது.

ஆனால், இப்போது கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சலுகையின் மூலம் 22+ ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, அனைத்து சலுகைகளையும் கொண்ட திட்டமாக இப்போது மாறிவிட்டது. இந்த ஓடிடிகளை பார்க்கையில், சோனிலிவ் (SonyLIV), ஈராஸ் நவ் (Eros Now), ஃபேன் கோட் (Fan Code) மற்றும் மனோரமா மேக்ஸ் (Manorama Max) கிடைக்கிறது.

மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), ஹங்கமா (Hungama), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix), எபிக் ஆன் (Epic On), கிளிக் (Klikk) மற்றும் சோஷியல் ஸ்வாக் (Social Swag), கான்ச்சா லங்கா (Kanccha Lanka), ஹோய்சோய் (HoiChoi), டாகுபே (Docubay), சாவ்பால் (Chaupal), ஷீமாரூமீ (Shemaroome) மற்றும் டிவோ (DIVO) சந்தா கிடைக்கிறது.

இதுபோக டாலிவுட்பிளே (Dollywood Play) மற்றும் அல்ட்ரா (Ultra) ஆகிய ஆப்களின் சந்தாவையும் பெற்று கொள்ளலாம். வரும் செப்டம்பர் 11ஆம் தேதி வரையில் ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த கூடுதல் ஓடிடி சந்தா கிடைக்கும். அதற்கு பிறகு வழக்கமான சலுகைகள் மட்டுமே கிடைக்கும். ஓடிடிக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த ஏர்டெல் திட்டத்துக்கு ரூ 3599 விலை என்றாலும், அதை மாதத்துக்கு கணக்கிட்டால், வெறும் ரூ 299 மட்டுமே செலவாகிறது. இந்த விலைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 5ஜி டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், இப்போது 22+ ஓடிடி சந்தாவும் கிடைப்பதால், நல்ல சலுகை கொண்டதாகவே இருக்கிறது. வருடம் முழுவதும் அனைத்து சலுகையும் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 3599 Plan Offer Unlimited Voice Calls 2GB Daily Data 365 Days Validity Check Yearly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X