Home
News

ஒரே Airtel ரீசார்ஜ்.. 365 நாட்கள் வேலிட்டிடி.. 2.5 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. ஓடிடி சந்தா!

ஒரேவொரு ரீசார்ஜ் வழியாக வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தாவும் வேண்டுமானால், 2 பெஸ்ட் ஆப்ஷன்கள் ஏர்டெல் நிறுவனத்தில் கிடைக்கின்றன. தினசரி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் இந்த திட்டங்கள் கொடுக்கின்றன.

1. ஏர்டெல் ரூ.3599 திட்டமானது முழுக்க முழுக்க டேட்டா மற்றும் ஓடிடி (OTT) சலுகைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக கிடைக்கிறது
வேலிடிட்டி: 365 நாட்கள் (1 வருடம் முழுவதும்)
வாய்ஸ் கால்: வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம்.

ஒரே Airtel ரீசார்ஜ்.. 365 நாட்கள் வேலிட்டிடி.. 2.5 ஜிபி டேட்டா!

டேட்டா சலுகை: தினமும் 2 ஜிபிக்கு 4ஜி டேட்டாவை பயன்படுத்தலாம். தினசரி அளவு முடிந்த பிறகு 64 Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.
அன்லிமிடெட் 5ஜி: நீங்கள் 5ஜி நெட்வொர்க் பகுதியில் இருந்தால், தினசரி 2 ஜிபி கணக்கில் வராது. முற்றிலும் இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அனுபவிக்கலாம்.

கூடுதல் சலுகைகள்:
அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium): 12 மாதங்களுக்கான இலவச சந்தாவாக இது கிடைக்கிறது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play): சோனிலிவ் (SonyLIV), அமேசான் எம்எக்ஸ் பிளேயர் (Amazon MX Player) உள்ளிட்ட ஆப்களின் இலவச கன்டென்ட்கள் (Free Content) கிடைக்கின்றன.
லைவ் ஸ்பேம் அலெர்ட்: ஸ்பேம் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை டிடெக்ட் செய்து கொள்ளலாம்.
ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes): 30 நாட்களுக்கு ஒருமுறை காலர் டியூனை மாற்றிக் கொள்ளலாம்.

2. ஏர்டெல் ரூ.3999 திட்டமானது, அதிக டேட்டா மற்றும் கூடுதல் பிரீமியம் ஓடிடி சந்தாக்களை எதிர்பார்ப்பவர்களுக்கு மிகச்சிறந்த ஆப்ஷனாக கிடைக்கிறது.
வேலிடிட்டி: 365 நாட்கள் (1 வருடம் முழுவதும்)
வாய்ஸ் கால் & எஸ்எம்எஸ்: அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம்.

டேட்டா சலுகை: தினமும் 2.5 ஜிபி 4ஜி டேட்டா கொடுக்கப்படுகிறது. வருடத்திற்கு மொத்தம் 912 ஜிபி டேட்டா கிடைக்கும். தினசரி லிமிட் முடிந்த பின் 64 Kbps வேகத்தில் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி: 5ஜி போன் மற்றும் நெட்வொர்க் உள்ளவர்கள், தினசரி 2.5 ஜிபி டேட்டாவை கணக்கில் எடுக்காமலேயே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இலவசமாகப் பெறலாம்.

ஓடிடி & கூடுதல் சலுகைகள்: ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கிறது. ரூ. 499 மதிப்புள்ள இந்த சந்தா 1 வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தாவை 12 மாதங்களுக்கு பெற்று கொல்ளலாம். இலவச ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) கிடைக்கும்.

எந்த திட்டம் உங்களுக்கு பெஸ்ட்?
உங்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் எக்ஸ்ட்ரீம் பிளே ஓடிடி போதுமானது என்றால் ஏர்டெல் ரூ.3599 திட்டம் சிறந்தது. அதுவே, கூடுதல் டேட்டாவும் (2.5 ஜிபி), ஜியோஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவும் வேண்டும் என்றால் ஏர்டெல் ரூ.3999 திட்டம் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைப்பதால், டேட்டாவில் இரண்டுமே சிறந்ததாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 3599 Plan Airtel Rs 3999 Plan With 365 Days Validity Unlimited Voice Calls 2.5 GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X