Home
News

ஆஹா இதுபோதுமே.. ரூ.5 டாக்டைம்.. 25ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 300 எஸ்எம்எஸ்.. பக்கா Airtel ரீசார்ஜ்!

ஏர்டெல் கஸ்டமர்களுக்கு டாக்டைம் மட்டுமல்லாமல், லம்ப்-சம் டேட்டா, லம்ப்-சம் எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையுடன் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு ரூ.17,000 மதிப்பில் கொடுக்கப்படும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா கிடைக்கிறது. இதுபோக ஓடிடி சலுகை, ஸ்பேம் அலெர்ட் சலுகை போன்றவை கிடைக்கிறது. இந்த ஏர்டெல் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் தினசரி டேட்டா (Daily Data) போன்ற சலுகைகளை இதில் எதிர்பார்க்க முடியாது. இந்த திட்டத்தின் விலைக்கு ஏற்ப 25 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பிறகும் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படாது. ஆகவே, இதைத் தெரிந்து கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

ஆஹா இதுபோதுமே.. ரூ.5 டாக்டைம்.. 25ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஏர்டெல் ரூ.355 மொபைல் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 355 Mobile Recharge Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஒரு மாதத்துக்கு அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி (Unlimited Local STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. டேட்டா சலுகையும், எஸ்எம்எஸ் சலுகையும் லம்ப்-சம் முறையில் வருகிறது.

ஆகவே, 30 நாட்களுக்கும் மொத்தமாக 25 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். தினசரி லிமிட் அல்லது வார லிமிட் என்று எதுவும் கிடையாது. தேவைப்படும்போது அதிகமாகவும், தேவையில்லாதபோது குறைவாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆனால், வேலிடிட்டி முன்பாக பயன்படுத்திவிட்டால், அதன் பிறகு அனுப்பும் எஸ்எம்எஸ்கள் அல்லது டேட்டாவுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் ரூ.5 மதிப்பிலான டாக்டைம் கொடுக்கப்படுகிறது. இந்த நான்கு சலுகைகள் போக கூடுதலாக பல்வேறு சலுகைகளை இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட திட்டம் (Airtel Prepaid Plan) கொடுத்து இருக்கிறது.

இந்த கூடுதல் சலுகைகளை பார்க்கையில், ஸ்பேம் வாய்ஸ் கால்கள் (Spam Voice Calls) மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் (Spam SMS) அலெர்ட் சலுகை கிடைக்கிறது. இதற்கு கூடுதல் கட்டணங்கள் கிடையாது. அதேபோல ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. மேலும், வழக்கமான ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையும் வருகிறது.

மேற்கண்ட சலுகைகள் மட்டுமே, இதுவரையில் கிடைத்து வந்தன. ஆனால், இப்போது பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவானது கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், இந்த சந்தாவின் மதிப்பு ரூ.17,000ஆக இருக்கிறது. இவ்வளவு அதிக விலை கொண்ட சந்தாவை முற்றிலும் இலவசமாக ஏர்டெல் நிறுவனம் கொடுத்து இருக்கிறது. இதை வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.

அதாவது, இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தாலும், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்கு டேட்டா இருந்தால் போதும், வழக்கம்போல அதை பயன்படுத்தி கொள்ளலாம். சொல்லப்போனால், இந்த திட்டத்தில் மட்டுமல்லாமல், அடிமட்ட திட்டம் முதல் இந்த சந்தா கிடைக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ, ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட் பாட் சேவையை இந்த பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கொடுக்கிறது. ஆனால், இது இலவச சந்தா போல அல்லாமல், கட்டணம் செலுத்தி கிடைக்கும் சலுகைகளை கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தின் சலுகைகளை பார்த்துவிட்டீர்கள். இனிமேல் உங்களது ஆப்ஷன் மட்டுமே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 355 Mobile Recharge Plan Offer 25GB Data Unlimited Voice 30 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X