Home
News

தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் ஏர்டெல் நிறுவனத்தின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம்.!

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது இந்த ஏர்டெல் நிறுவனம்.

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 70ஜிபி டேட்டா நன்மையை பெறமுடியும். இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Shaw Academy, Wynk Music மற்றும் Amazon Prime மெம்பர்ஷிப் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் உள்ளன. கண்டிப்பாக இந்த திட்டம் ஏர்டெல் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்என்று தான் கூறவேண்டும். மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன.

 ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன.

ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. மேலும் ஜியோ நிறுவனம் அதன் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. அந்த திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.152 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் பேக்

ஜியோ ரூ.152 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் பேக்

அதாவது ஜியோ ரூ.152 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் பேக் ரீசார்ஜ் ஆனது ஜியோபோன் பயனர்களுக்கு மாதத்திற்கு 56 ஜிபி அளவிலான அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக அதிக டேட்டா தேடும் பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ரூ.152 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்

இருந்தபோதிலும் ரூ.152 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் பேக் ஆனது எந்த விதமான குரல் அழைப்பு நன்மைகளையும் வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தினசரி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் ரூ.152 ப்ரீபெய்ட் பேக் வேலிடிட்டி 28 நாட்கள் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை பயன்படுத்த முடியும். எனவே மொத்தமாக இந்த திட்டத்தில் 56ஜிபி டேட்டா நன்மையை பயன்படுத்த முடியும். மேலும் ரூ.152 ப்ரீபெய்ட் பேக்கில் JioCinema, JioTV, JioCloud போன்ற Jio ஆப்களின் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உங்களிடம் வாய்ஸ்கால் மற்றும் ஆப்களுக்கான அணுகலை வழங்கும் ஆக்டிவ் திட்டம் ஏற்கனவே இருந்தால், இந்த ரூ.152 ஆனது ஒரு டேட்டா ஆட்-ஆன் ஆகவே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கம்மி விலையில் அதிக டேட்டாவை வழங்குகிறது ஜியோ நிறுவனம். ஆனாலும் இந்த ரூ.152 டேட்டா பேக்கை பயன்படுத்த ஜியோபோன் கண்டிப்பாக தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 349 prepaid plan offering 2.5 GB of data per day: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X