Airtel க்கு கும்பிடு.. இனி ரூ.349 போதும்.. 6 மாதங்களுக்கு FREE.. 1.5ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ.349 செலவில் 6 மாதங்களுக்கு சந்தா கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியான திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. மேலும், கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் ஆப்பிள் மியூசிக் சந்தா (Apple Music Subscription) கிடைக்கிறது. எந்தவித கூடுதல் செலவும் இல்லாமலேயே 6 மாதங்களுக்கு இந்த ஆப்பிள் மியூசிக் சந்தாவை பெற்று கொள்ளலாம். இதில் ஏர்டெல் ரூ. 349 திட்டமானது, கூடுதல் சலுகைகளை கொடுப்பதால், கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.

ஏர்டெல் ரூ 349 திட்ட விவரங்கள் (Airtel Rs 349 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்காத சலுகைகளே இல்லையென்று சொல்லலாம். ஏனென்றால், வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் ஆகிய முக்கிய சலுகைகள் போக, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), 20+ ஓடிடி ஆப்களின் சந்தா, 12 மாதங்களுக்கான அடோப் சந்தா, ப்ரீ ஹலோ டியூன்ஸ் உள்ளிட்ட சலுகைகள் வருகின்றன.
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) தொடர்ந்து கிடைக்கும். இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையைும் இந்த திட்டம் கொடுக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கிறது.
ஆகவே, லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்களை (Local, STD & Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. இந்த சலுகைகள் போக 6 மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் சந்தா கொடுக்கப்படும். 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கொடுக்கப்படும்.
ரூ.4,000 மதிப்புள்ள இந்த சந்தா முற்றிலும் இலவமாக கிடைக்கிறது. இந்த சந்தா போக 20+ ஓடிடி ஆப்களை கொடுக்கும்படி ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவை இந்த ஏர்டெல் ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த எக்ஸ்ட்ரீம் பிளேவின் கீழ் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongate Play), ஆஹா (Aha), சாவ்பால் (Chaupal) ஆப்கள் கிடைக்கின்றன.
மேலும், ஹோய்சோய் (Hoichoi), சன்நெக்ஸ்ட் (SunNxt) சந்தாவும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஓடிடி ஆப்களை 28 நாட்கள் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும், ஏர்டெல் லைல் ஸ்பேம் அலெர்ட் (Airtel Live Spam Alert) சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையும் கிடைத்து இருக்கிறது. ஆப்பிள் மியூசிக் மேலும் சில திட்டங்களில் உள்ளது.
ஏர்டெல் ரூ. 319 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஆப்பிள் மியூசிக் சந்தா கிடைக்கும். இதுபோக 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் மற்றும் அடோப் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். மேலும், ஏர்டெல் ரூ. 449 திட்டத்திலும் ஆப்பிள் மியூசிக் சந்தா கிடைக்கிறது. இந்த திட்டங்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








