மொத்தமா இறக்கிய ஏர்டெல்.. ரூ.349-க்கு வாய்ஸ் கால்கள்.. 1.5GB டேட்டா.. 12 மாதங்களுக்கு AI சந்தா.. 22 ஓடிடி ஆப்!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஃபெஸ்டிவல் ஆஃபராக நம்ப முடியாத சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஒரேவொரு திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா, தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஏஐ சாட்பாட் சாந்தா, 22+ ஓடிடி சந்தா, ஆப்பிள் மியூசிக் சந்தா போன்ற ஏகப்பட்ட சலுகைகள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ நிறுவனமானது, அதன் ரூ.349 மதிப்பிலான திட்டத்தில் ஜியோ கோல்டு, ஜியோசாவன், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இதனால், போட்டி நிறுவனமான ஏர்டெல்லும், அதனுடயை இந்த ரூ.349 திட்டத்தில் இதுவரையில் கிடைக்காத சலுகைகளை அறிவித்துள்ளது. இதுவும் ஜியோவுக்கு நிகராக இருக்கிறது.

ஏர்டெல் ரூ 349 திட்ட விவரங்கள் (Airtel Rs 349 Plan Details): இந்த திட்டத்துக்கு வழக்கமாக கிடைக்கும் 1.5 ஜிபி டேட்டா தினசரிக்கு வருகிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கொடுக்கிறது. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது.
இந்த வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சலுகைகளுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக ஃபெஸ்டிவல் ஆஃபரில் பல்வேறு கூடுதல் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சலுகை இருக்கிறது. இதில் 22+ ஓடிடி ஆப்களின் சந்தாவை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும்.
ஆனால், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற பிரீமியம் ஓடிடி ஆப்கள் கிடைக்காது. இருப்பினும், சோனிலிவ் (SonyLIV), ஆஹா (Aha), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi) போன்ற ஆப்கள் கிடைக்கின்றன. இதுபோக சன்நெக்ஸ்ட் (SunNXT) சந்தாவும் இந்த எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியமில் கிடைக்கிறது.
இந்த ஓடிடிகளுக்கு ஏற்ப அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைப்பதால், 28 நாட்கள் முழுவதும் கூடுதல் டேட்டா சலுகை இல்லாமலேயே பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 1.5 ஜிபி தினசரி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்து ஆப்பிள் மியூசிக் (Apple Music) சந்தா கிடைக்கிறது.
இதில் விளம்பரங்கள் இருக்காது. இறுதியாக பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தாவை கஸ்டமர்களுக்கு பெற்று கொள்ளலாம். இது 12 மாதங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டும் கிடைத்தாலும், இந்த ப்ரோ ஏஐ சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் போக ஸ்பேம் பில்டர் சலுகை கிடைக்கிறது.
லைவ்வாக ஏர்டெல் வார்னிங் அலெர்ட் கிடைக்கும். இதன் மூலம் எஸ்எம்எஸ்கள் மற்றும் வாய்ஸ் கால்களில் இருக்கும் ஸ்பேம்களை டிடெக்ட் செய்து கொள்ளலாம். இந்த ஒட்டுமொத்த சலுகைகளும் ரூ.349 விலைக்கு கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளில் ஓடிடி மற்றும் ஆப்பிள் மியூசில் சந்தா மட்டுமே கூடுதலாக இருக்கிறது. ஆனால், ஜியோவில் மேலும் சலுகைகள் இருக்கின்றன.
அதாவது, அஜியோ, ரிலையன்ஸ் டிஜிட்டல், ஈஸ்மைட்ரிப் போன்றவற்றில் டிஸ்கவுண்ட் கொடுக்கிறது. நெட்மெட்ஸ், ஜியோசாவன் போன்ற சந்தாவும் கிடைக்கிறது. 2 சதவீத டிஜிட்டல் கோல்டு கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஜியோ ஏஐ கிளவுட், ஜியோ டிவி, ஜியோஹாட்ஸ்டார் போன்ற சலுகைகள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications