Airtel-க்கு முக்கிய அறிவிப்பு.. இனி 1.5 ஜிபி திட்டத்துல அன்லிமிடெட் 5ஜி டேட்டா.. 28 நாட்கள் வேலிடிட்டி வருது!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) வேண்டுமானால், தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை பெற வேண்டி இருந்தது. 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களில் கிடைக்காமல் இருந்தது. இப்போது, ஆரம்ப விலை 5ஜி திட்டமாக ரூ.349 ரீசார்ஜ் மாறி இருக்கிறது.
ஏர்டெல் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. ஆனால், இது எல்லா திட்டங்களிலும் கிடைக்காது. குறிப்பிட்ட ஜிபி அல்லது விலை கொண்ட திட்டங்களில் மட்டுமே கிடைக்கும். இப்படி தினசரிக்கு 2 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைத்தது வந்தது. இப்போது. 1.5 ஜிபி திட்டத்திலும் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.349 திட்ட விவரங்கள் (Airtel Rs 349 Plan Details): இந்த திட்டம் ஆரம்ப விலை அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டமாக இருக்கிறது. ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் போதும், முற்றிலும் இலவசமாக பெற்று கொள்ளலாம்.
இந்த டேட்டாவை 5ஜி கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். ஒருவேளை 4ஜி ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் கஸ்டமர்களாக இருந்தால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஆகவே, 42 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் (Post Data) கிடைக்கும்.
இந்த டேட்டா சலுகைகள் போக கூடுதலாக பல்வேறு சலுகைகளை இந்த திட்டம் கொடுத்துள்ளது. இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை கொடுத்துள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். மேலும், ஆப்பிள் மியூசிக் (Apple Music) சலுகையை கொடுத்துள்ளது.
இதுபோக ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தாவையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. இறுதியாக ஸ்பேம் கால்கள், எஸ்எம்எஸ்களை அலெர்ட் செய்யும்படி ஷேப் நெட்வொர்க் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கு இதை ரீசார்ஜ் செய்யலாம்.
ஒருவேளை அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் ஓடிடி சந்தாவும் வேண்டுமானால், ஏர்டெல் ரூ.449 திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம். இதில் பிரீமியம் ஓடிடி ஆப்கள், கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட சலுகைகளுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படும்.
ஏர்டெல் ரூ.449 திட்ட விவரங்கள் (Airtel Rs 449 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், நாளொன்றுக்கு 4 ஜிபி டேட்டா கிடைக்கும். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 5ஜி கஸ்டமர்களாக இருந்தாலும், 4ஜி கஸ்டமர்களாக இருந்தாலும் டேட்டாவில் குறை இருக்காது.
இந்த டேட்டா சலுகை போக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா வருகிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவில் சோனிலிவ், லயன்ஸ்கேட் பிளே, ஆஹா, சாவ்பால் உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. கூகுள் ஒன் வழியாக 30 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரி இருக்கிறது.


Click it and Unblock the Notifications