Home
News

Airtel சிம் வைத்து இருப்பவர்களுக்கு அடுத்த 28 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்.. 2GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்களில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் பெஸ்ட் திட்டம் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு பக்கா ஆப்ஷனாக ஏர்டெல் ரூ.348 திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டும் கிடையாது. மற்றபடி பட்டையை கிளப்பும்படி சலுகைகள் பேக் செய்யப்பட்டு இருக்கின்றன.

டெலிகாம் மார்கெட்டில் இப்போது ரூ.350 விலை கையில் இருந்தால் மட்டுமே, போதுமான டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுடன் ரீசார்ஜ் செய்ய முடிகிறது. இதைவிட மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பினால், டேட்டா சலுகை குறைக்கப்படும். அதேபோல பல்க் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். ஆகவே, ரூ.350 திட்டத்தில் எது பெஸ்ட் என்று பார்க்க வேண்டும்.

Airtel சிம் வைத்து இருப்பவர்களுக்கு அடுத்த 28 நாட்களுக்கு இதுதான்!

இந்த விலையில் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு நல்ல ஆப்ஷனாக ரூ.348 திட்டம் இருக்கிறது. ஏனென்றால், இதில் பல்க் எஸ்எம்எஸ் அல்லது பல்க் டேட்டா கிடையாது. ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் விரும்பும்படி தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள் வழக்கம்போலவே அன்லிமிடெட் சலுகையில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஏர்டெல் ரூ.348 திட்ட விவரங்கள் (Airtel Rs 348 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், ப்ரீ ஹேலோ டியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலர்ட் சலுகைகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படும்.

ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Ulimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) இந்த ஏர்டெல் ரூ.348 திட்டத்துக்கு கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 56 ஜிபி டேட்டாவை மொத்தமாக பயன்படுத்தி கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஏர்டெல் ரூ.348 திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். கூடுதல் சலுகைகளை பார்க்கையில், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தாலும், இந்த சந்தாவுக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதன் மதிப்பு ரூ.4,000 ஆக உள்ளது.

ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வருகிற ஸ்பேம் கால்கள் அல்லது ஸ்பேம் எஸ்எம்எஸ்களை டிடெக்ட் செய்து அலெர்ட் செய்து கொள்ளும்படி ஸ்பேம் அலெர்ட் சலுகையை இந்த ஏர்டெல் ரூ.348 திட்டம் கொடுத்து இருக்கிறது. இந்த சலுகைகளுடன் ரூ.348 விலைக்கு கிடைக்கிறது. இதே விலையில் ஜியோ கஸ்டமர்களுக்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. ரூ.1 விலை அதிகமாக இருக்கிறது.

அதாவது, ரூ.349 விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆனால், இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி வரையில் பல்வேறு கூடுதல் சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், 18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோ சந்தா, கேன்வா ப்ரோ லைட் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற நம்ப முடியாத சலுகைகளையும் இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 348 Plan With Unlimited Local STD Roaming Calls 2GB Data Per Day Check Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X