Home
News

ஏர்டெல் ரூ.348 மற்றும் ரூ.349 திட்டங்கள்.. என்னென்ன சலுகைகள்? வேலிடிட்டி? எது சிறந்தது?

ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியாக அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் நிறுவனம். அதுவும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போதும் வழங்குகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.349 மற்றும் ரூ.348 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இந்த திட்டங்களின் நன்மைகளை என்னென்ன மற்றும் எத்தனை நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.348 மற்றும் ரூ.349 திட்டங்கள்.. என்னென்ன சலுகைகள்?

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.349 Prepaid Plan) தினமும் 1.5 ஜிபி டேட்டா (Daily 1.5 GB Data)நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 42ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 64 கேபிபிஎஸ்-ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர பல சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி தினமும் 100 எஸ்எம்எஸ், ஆப்பிள் மியூசிக் சந்தா, ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி போன்ற நன்மைகளும் இந்த ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.348 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.348 Prepaid Plan) தினமும் 2 ஜிபி டேட்டா (Daily 2 GB Data) நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 64 கேபிபிஎஸ்-ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.348 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), போன்ற நன்மைகளும் இந்த ஏர்டெல் ரூ.348 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.348 மற்றும் ரூ.349 திட்டங்கள்.. என்னென்ன சலுகைகள்?

எது சிறந்தது?
28 நாட்கள் உடன் அதிக டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல்லின் ரூ.348 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. ஆப்பிள் மியூசிக் சந்தா மற்றும் கூடுதல் சலுகைகள் தேவைப்படும் பயனர்கள் ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இந்த இரண்டு ஏர்டெல் திட்டங்களும் கிட்டத்தட்ட அதிக சலுகைகள் வழங்குகிறது.

அதேபோல் டிராய் உத்தரவின்படி ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.185, ரூ.203, ரூ.206 விலையில் புதிய வாய்ஸ் மற்றும் SMS திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் அன்லிமிடெட் கால்கள், 300 SMS, இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் 28 முதல் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால் டேட்டா வசதி இல்லை. மேலும் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs.348 and Rs.349 prepaid plans benefits: Which one is better to choose
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X