ஏர்டெல் ஹிட்.. மாதத்துக்கு ரூ.279 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2.5 ஜிபி டேட்டா.. ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்!
ஏர்டெல் (Airtel) நிறுவனம் மாதத்துக்கு வெறும் ரூ.279 செலவில் 2.5 ஜிபி டெய்லி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகை மட்டுமல்லாமல் ஓடிடி சலுகையையும் 365 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு புதுப்புது ஓடிடி மற்றும் டேட்டா திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு நிகராக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன் 28 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை பற்றி இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ 499 திட்ட விவரங்கள் (Airtel Rs 499 Plan Details): இந்த திட்டத்தில் டெய்லி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி சப்ஸ்ப்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி வீதம் மொத்தமாக 84 ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதோடு அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) கால்களை செய்து கொள்ள முடியும். அதே போல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதுபோக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளேவின் (Airtel Xstream Play) ஓடிடி சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
ஆகவே, ஈராஸ் நவ் (ErosNow), சோனிலிவ் (SonyLiv) ஹோய்சோய் (HoiChoi), ஷீமரூமீ (SheemarooMe), லயன்ஸ்கேட் பிளே (LionsgatePlay), அல்ட்ரா எபிகான் (Ultra Epicon), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), டிவோ (Divo), டோலிவுட் (Dollywood), நம்மபிளிக்ஸ் (Namaflix) மற்றும் கிளிக் (Klikk) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படும்.
அதேபோல டாகுபே (Docubay) ஹங்கமாபிளே (HungamaPlay), ஷார்ட்ஸ்டிவி (ShortsTV), சோஷியல்ஸ்வாக் (SocialSwag), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV) மற்றும் சௌபால் (Chaupal) ஆகியவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோக மூன்று மாதத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.
மேலும், அப்பல்லோ 24|7 சர்க்கிள் ( Apollo 24|7 Circle), விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Hellotunes) ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதேபோன்ற சலுகைகளுடன் 365 நாட்களுக்கு திட்டம் வேண்டுமானால், நீங்கள் மாதத்துக்கு ரூ 279 செலவில் கிடைக்கும் ரூ 3359 திட்டத்தை தேர்வு செய்யலாம்.
ஏர்டெல் ரூ 3359 திட்ட விவரங்கள் (Airtel Rs 3359 Plan Details): இந்த திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் நளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 912 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். இதுபோல ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Airtel Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் தினசரி டேட்டாவுக்கு பிறகு அன்லிமிடெட் 5ஜி சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த சலுகைகள் போக ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளேவின் சலுகைகள் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் மற்றும் ப்ரீ ஹாலோடியூன்ஸ் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த திட்டங்கள் தடையில்லா ஓடிடி மற்றும் டேட்டா சேவையை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








