Home
News

இதுக்கு மேல கம்மியா இல்ல.. ரூ.319 எடுத்து வைங்க.. வாய்ஸ் கால்கள்.. 1.5ஜிபி டேட்டா.. மலிவான கூகுள் ஒன் திட்டம்!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு ஒரு மாத வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையுடன் கூகுள் ஒன் சந்தா வேண்டுமானால், குறைந்தபட்சம் ரூ.319 விலை கொண்ட திட்டத்துக்கு செல்ல வேண்டி இருக்கும். இதுபோக ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதிலும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைள் இருக்கின்றன. இந்த கூகுள் ஒன் திட்டங்களின் (Google One Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் ஒன் சந்தாவில் கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது. இதற்காக தனியாக செலவு செய்யாமல், ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலமே பெற்று கொள்ளலாம். ஆனால், குறைந்தபட்சம் ரூ.319 விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். அதிகபட்சம் ரூ.449 விலை வரையில் திட்டங்கள் கிடைக்கின்றன.

இதுக்கு மேல கம்மியா இல்ல.. ரூ.319 எடுத்து வைங்க.. வாய்ஸ் கால்கள்!

ஏர்டெல் ரூ 319 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 319 Prepaid Plan): இந்த கூகுள் ஒன் சந்தா கொண்ட திட்டத்துக்கு ஒரு மாத வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. அதேபோல ஒரு மாதம் முழுவதும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். 100 எஸ்எம்எஸ் சலுகை நாளொன்றுக்கு அனுப்ப கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக கூடுதல் சலுகையாக ஆப்பிள் மியூசிக் (Apple Music) சந்தா கிடைக்கிறது. ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை கிடைக்கிறது. 30 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும்.

ஏர்டெல் ரூ 379 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 379 Prepaid Plan): முந்தைய திட்டத்தில் தினசரி டேட்டா மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படுகிறது. ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். தினசரி டேட்டாவுக்கு பிறகும் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

64 கேபிபிஎஸ் வேகத்தில் இந்த டேட்டாவை பயன்படுத்தலாம். முந்தைய திட்டத்தில் கூடுதலாக ஆப்பிள் மியூசிக் மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்தில் இந்த சலுகைகள் போக கூடுதலாக பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா மற்றும் லைவ் ஸ்பேம் அலெர்ட் (Live Spam Alert) சலுகை கிடைக்கிறது.

இதில் பெர்ப்லெக்ஸிடி சந்தா 12 மாதங்களுக்கு கொடுக்கப்படும். முந்தைய திட்டத்தில் பார்த்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 30 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. அதேபோல ஒரு மாத வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. அடுத்த திட்டத்தில் ஓடிடி சலுகையை பெற்று கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 449 Prepaid Plan): கூகுள் ஒன் திட்டங்களிலேயே அதிகப்படியான சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. ஏனென்றால், நாளொன்றுக்கு 4 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இது முந்தைய திட்டத்தைவிட 2 மடங்கு அதிகமாக இருக்கிறது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது.

ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play) சந்தா கிடைக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. 30 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், அன்லிமிடெட் வாய்ஸ், 100 எஸ்எம்எஸ்கள், ஆப்பிள் மியூசிக், ஸ்பேம் அலெர்ட், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 319 Plan With Unlimited Voice Calls Monthly Validity Check Cheapest Google One Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X