Home
News

Airtel சிம் இருக்கா.. உடனே ரூ.319-க்கு இதை பண்ணிடுங்க.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா!

ஏர்டெல் சிம் கார்டு (Airtel SIM Card) வைத்திருக்கும் கஸ்டமர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியில் சிக்காமல் இருக்க மாதாந்திர வேலிடிட்டி (Monthly Validity) கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்ல, கூடுதலாக பல்வேறு சலுகைகளை மலிவான விலைக்கு பெற்று கொள்ளலாம். இந்த ஏர்டெல் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 319 திட்ட விவரங்கள் (Airtel Rs 319 Plan Details): இந்த திட்டம் மாதாந்திர வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, 30 நாட்கள் அல்லது 31 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஏர்டெல் கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்யும் மாதத்தை பொறுத்து அடுத்த மாதம் அதே தேதி வரையில் வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டி நாட்களில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

Airtel சிம் இருக்கா.. உடனே ரூ.319-க்கு இதை பண்ணிடுங்க.. அன்லிமிடெட்!

இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா (Post Data) மட்டுமே கிடைக்கும். ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்காது. ஆகவே, இந்த 1.5 ஜிபி டேட்டாவை 4ஜி வேகத்தில் மட்டுமே கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

கால்களை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி & ரோமிங் (STD & Roaming) கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக மூன்று கூடுதல் சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. கூகுள் ஒன் (Google One) மூலமாக 30 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) சலுகையை பெற்று கொள்ளலாம். மேலும், ஆப்பிள் மியூசிக் (Apple Music) கிடைக்கிறது.

இதுபோக 30 நாட்களுக்கு ஒரு டியூன் வைத்து கொள்ளும்படி ப்ரீ ஹலேடியூன்ஸ் (Free Hellotunes) சலுகை கொடுக்கப்படுகிறது. மாதாந்திர வேலிடிட்டியில் அதிகப்படியான சலுகைகள் வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதைவிட மலிவான விலைக்கு ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், ரூ.299 விலை கொண்ட திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம்.

ஏர்டெல் ரூ 299 திட்ட விவரங்கள் (Airtel Rs 299 Plan Details): இந்த திட்டத்துக்கு வழக்கமாக கிடைக்கும்படி 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல முந்தைய திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைத்தது. ஆனால், இதில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆகவே, வேலிடிட்டி முழுவதும் 28 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.

இதிலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படவில்லை. ஆனால், முந்தைய திட்டத்தில் கிடைத்த 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த விலைக்கு ஏற்பவே டேட்டா சலுகை இருக்கிறது. மற்ற சலுகைகளை பார்க்கையில், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் கொடுக்கப்படும்.

ஆனால், ஆப்பிள் மியூசிக், கூகுள் ஒன் போன்ற சலுகைகள் இதில் கொடுக்கப்படாது. ஸ்பேம் அலெர்ட் சலுகை மற்றும் ப்ரீ ஹலேடியூன்ஸ் சலுகை கொடுக்கப்படும். இதுபோக பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவை இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது. மாதாந்திர வேலிடிட்டிக்கு முதலாவது திட்டம் பக்கா தேர்வாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 319 Plan With Unlimited Voice 1 Month Validity 30GB Cloud Storage Check Monthly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X