Home
News

அடிச்சான் பாரு ஏர்டெல்.. மினிமம் ரூ.319 ரீசார்ஜ் போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 30 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு மினிமம் ரூ.319 விலை கொண்ட ரீசார்ஜ் திட்டத்தில் இருந்து கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் (Google One Cloud Storage) கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) சலுகைகளும் கிடைக்கிறது. மேலும், ஆப்பிள் மியூசிக், ப்ரீ ஹலோ டியூன்ஸ் போன்ற சலுகைகளும் இதில் இருக்கின்றன. இந்த கூகுள் ஒன் திட்டங்கள் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல்லில் கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் அணுகலை கொடுக்கும்படி மொத்தமாக 3 திட்டங்கள் இருக்கின்றன. இதில் ஓடிடி சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா என்று பல்வேறு சலுகைகளுக்கு ஏற்ப விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றன. முதலில் மினிமம் விலையில் கிடைக்கும் ஏர்டெல் திட்டத்தில் இருந்து சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

அடிச்சான் பாரு ஏர்டெல்.. மினிமம் ரூ.319 ரீசார்ஜ் போதும்.. அன்லிமிடெட்!

ஏர்டெல் ரூ 319 திட்ட விவரங்கள் (Airtel Rs 319 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 ஜிபிக்கான கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதுபோக ஆப்பிள் மியூசிக் (Apple Music) சலுகை கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது.

நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 30 நாட்களுக்கு ஒரு ப்ரீ ஹலோ டியூன் சலுகை கிடைக்கிறது. 1 மாதத்துக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கு அடுத்த திட்டம் சரியாக இருக்கும்.

ஏர்டெல் ரூ 379 திட்ட விவரங்கள் (Airtel Rs 379 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் அதே 30 ஜிபிக்கான கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. அதேபோல ஆப்பிள் மியூசிக் சலுகை மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது. ஆனால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது.

இது முந்தைய திட்டத்தைவிட அதிகமாக இருக்கிறது. இதுபோக முந்தைய திட்டத்தில் கிடைக்காத பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா மற்றும் லைவ் ஸ்பேம் அலெர்ட் சலுகை இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த பெர்ப்லெக்ஸிடி சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். வாய்ஸ் கால்கள் சலுகை முந்தைய திட்டத்தை போலவே கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 449 திட்ட விவரங்கள் (Airtel Rs 449 Plan Details): 30 ஜிபி கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா 28 நாட்களுக்கு கிடைக்கிறது. இதுபோக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ப்ரீமியம் சந்தாவும் கிடைக்கிறது. இதில் 22+ ஓடிடிகள் கிடைக்கின்றன.

சோனிலிவ், சன்நெக்ஸ்ட் ஆப்கள் இதில் கிடைக்கின்றன. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 4 ஜிபி டேட்டா கிடைக்கும். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி ரோமிங் வாய்ஸ் கால்கள் வருகிறது.

மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஆப்பிள் மியூசிக் சலுகை கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் பார்த்த 12 மாதங்களுக்கான பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கிடைக்கிறது. அதேபோல லைவ் ஸ்பேம் அலெர்ட் சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த 3 திட்டங்களில் கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் பெற்று கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 319 Plan With Unlimited Voice 1 Month Validity 30GB Cloud Storage Check Google One Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X