Home
News

ரூ.301 முதல்.. மூன்று மாத OTT நன்மை.. தினமும் 3ஜிபி டேட்டா.. அள்ளி கொடுக்கும் Airtel திட்டங்கள்..

ஏர்டெல் (Airtel) நிறுவனம் தொடர்ந்து கம்மி விலையில் ஓடிடி (OTT) மற்றும் அதிக நாள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.301 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 301 Prepaid plan) தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.301 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 16கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.301 முதல்.. மூன்று மாத OTT நன்மை.. அள்ளி கொடுக்கும் Airtel ..

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.301 திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் OTT சந்தாவை (JioHotstar subscription) இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.301 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 398 Prepaid plan details) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை (JioHotstar subscription) வழங்குகிறது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட நன்மைகளும் இதில் உள்ளன.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 Plan Details) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.
மேலும் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் OTT (amazon prime membership) சந்தா வழங்கும் இந்த ரூ.838 திட்டம்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது.

photo credit: newsd

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs.301, Rs. 398, Rs.838 plans Benefits and validity: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X