Airtel ரூ.301 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.. OTT.. என்னென்ன நன்மைகள்? எத்தனை நாள் வேலிடிட்டி?
ஏர்டெல் (Airtel) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.301 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகள் வேலிடிட்டி குறித்து பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.301 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 301 Prepaid plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.301 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 16கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள்
(Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.301 திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை (JioHotstar subscription) இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.
இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.301 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் ஓடிடி நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த ஏர்டெல் ரூ.310 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதேபோல் நேற்று இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்தது ஏர்டெல் நிறுவனம். அந்த திட்டங்களையும் இப்போது பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.195 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 195 plan) ஆனது 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். மேலும் 15ஜிபி டேட்டா நன்மை இந்த திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டம் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை
(JioHotstar subscription)வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் கிடைக்காது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 100 plan) ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இதுவும் ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். அதேபோல் 5ஜிபி டேட்டா நன்மை இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டம் 30 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை (JioHotstar subscription) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அதிக டேட்டா மற்றும் ஒடிடி நன்மைகளை விரும்பும் பயனர்கள் ரூ.1029 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1029 Prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த ஏர்டெல் ரூ.1029 திட்டமும் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா வழங்கும்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








