Airtel போட்ட ஒரே போடு.. ரூ.301-க்கு இறக்கியாச்சு.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலைக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JioHotstar Subscription) மட்டுமல்லாமல், கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) மற்றும் ஏர்டெல்லின் கூடுதல் சலுகைகளும் (Extra Offers) வேண்டுமானால், அவர்களுக்கு புதியதாக களமிறங்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) பக்கா ஆப்ஷனாக இருக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமானது, ஜியோஹாட்ஸ்டார் திட்டங்களை அடிமட்ட விலைக்கு கொடுக்க தொடங்கிய அதே நேரத்தில் ஏர்டெல் நிறுவனமும் அதே விலைக்கு புதிய திட்டங்களை களமிறக்கியது. ஆனால், இவை டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை மட்டுமே கொடுக்கும் திட்டங்களாக இருந்தன. ஆனால், இப்போது பார்க்கப் போகும் திட்டம் அப்படி கிடையாது.

ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுடன் வழக்கமாக கிடைக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் சலுகைகளுடன் வருகிறது. இந்த திட்டம் ரூ 301 விலைக்கு கிடைக்கிறது. ஆனால், ரூ 149 மதிப்பிலான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை கொடுக்கிறது. மீதமுள்ள ரூ 152 விலைக்கே நம்ப முடியாத சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
ஏர்டெல் ரூ 301 திட்ட விவரங்கள் (Airtel Rs 301 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்களுக்கு பிறகு அடுத்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஓடிடி தொடர்ந்து கிடைக்கும்.
அதேபோல 1 டிவைஸ், 1080p ரெசொலூஷன் போன்ற சலுகைகளை கொடுக்கும் மொபைல் சந்தாவை மட்டுமே இந்த திட்டத்தில் பெற்று கொள்ள முடியும். இப்போது மற்ற சலுகைகளுக்கு வருவோம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 1 ஜிபிக்கான டேட்டா தினமும் கொடுக்கப்படும். ஆகவே, 28 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை பெற முடியும்.
இந்த ஏர்டெல் திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது. ஆகவே, கொடுக்கப்பட்ட லிமிடெட்டுக்கு மேல் டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்கள் தேவைப்படும். ஆனால், வாய்ஸ் கால்கள் சலுகை அப்படி கொடுக்கப்படவில்லை. 28 நாட்கள்தோறும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்களை (Roaming Calls) பெற முடியும்.
எஸ்எம்எஸ் சலுகைகளும் வழக்கமான ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைப்பதை போல நாளொன்றுக்கு 100 என்னும் லிமிட்டில் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த ஓடிடி, வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் போல அப்பல்லோ 24/7 சர்க்கிள் சப்கிரிப்ஷன் 90 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் வேண்டாம், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி போதும் என்றால் வேறு திட்டங்கள் உள்ளன.
ரூ.100 முதல் தொடங்குகிறது. ஆனால், இந்த ஏர்டெல் ரூ 100 திட்டத்தில் 5 ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்களுக்கான ஜியோஹாஸ்டார் சந்தா மட்டுமே கிடைக்கும். அதேபோல ஏர்டெல் ரூ 151 மதிப்பிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அதில் 90 நாட்களுக்கு ஜியோஹாஸ்டார் சந்தா கிடைக்கிறது. மேலும், 15 ஜிபி டேட்டா சலுகையும் கிடைக்கிறது.
இதற்கு அடுத்து ஏர்டெல் ரூ 451 டேட்டா மற்றும் ஓடிடி சலுகை கொண்ட திட்டம் கிடைக்கிறது. இதில் 50 ஜிபி டேட்டாவும், முந்தைய திட்டத்தில் கிடைத்த 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கிறது. ஆனால், இந்த திட்டங்களில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற முக்கிய சலுகைகள் கிடைக்காது.


Click it and Unblock the Notifications








