இனி கும்பிடுதான்.. ரூ.300-க்கு இறக்கிய Airtel.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 ஜிபி டேட்டா.. குஷியில் கஸ்டமர்கள்!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களிடம் இனிமேல் ரூ.300 இருந்தால் போதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கும்படி ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) களமிறக்கப்பட்டுள்ளன. ரூ,300-க்கு கீழ் கிடைக்கும் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ (Jio), ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிகரித்த பிறகு, அடிமட்ட விலைக்கு கிடைக்கும் திட்டங்களின் பக்கம் டெலிகாம் (Telecom) கஸ்டமர்களின் கவனம் சென்றுவிட்டது. இதில் கோடிக்கணக்கான கஸ்டமர்களை வைத்திருக்கும் ஏர்டெல் நிறுவனம் லாபகரமான திட்டங்களை கொடுத்துள்ளது.

ஏர்டெல் ரூ 299 திட்ட விவரங்கள் (Airtel Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 1 ஜிபி தினசரி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கிறது.
மேலும், 100 எஸ்எம்எஸ் சலுகை நாளொன்றுக்கு வருகிறது. இந்த சலுகைகளை மட்டுமே இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இதைவிட மலிவான விலைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கின்றன. இதில் ஏர்டெல் ரூ.249 திட்டம், ஏர்டெல் ரூ.219 திட்டம் மற்றும் ஏர்டெல் ரூ.199 திட்டங்கள் அடங்கும். இதில் லம்ப்-சம் டேட்டாவிலும் திட்டங்கள் இருக்கின்றன.
ஏர்டெல் ரூ 249 திட்ட விவரங்கள் (Airtel Rs 249 Plan Details): இந்த ஏர்டெல் திட்டத்தில் முந்தைய திட்டத்தில் கிடைத்த சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், அவை 24 நாட்கள் வேலிடிட்டியில் கொடுக்கப்படுகின்றன. ஆகவே, 24 நாட்கள் முழுவதும் தினசரிக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கிடைக்கிறது.
அதேபோல தினமும் 100 எஸ்எம்எஸ்களையும், முந்தைய திட்டத்தில் பார்த்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் கால்கள் வருகிறது. இதுபோக வேறு சலுகைகளை இந்த திட்டம் கொடுக்காது. இதற்கு அடுத்த திட்டம் லம்ப்-டேட்டா சலுகையை கொடுக்கிறது. ஆகவே, அதில் தினசரி லிமிட்டில் டேட்டாவை பயன்படுத்த முடியாது.
ஏர்டெல் ரூ 219 திட்ட விவரங்கள் (Airtel Rs 219 Plan Details): இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டமானது லம்ப்-சம் டேட்டா சலுகையுடன் வருவதால், முந்தைய திட்டத்தைவிட கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டியில் 3 ஜிபி டேட்டாவை லம்ப்-சம் முறையில் பயன்படுத்தலாம். ஆனால், வாய்ஸ் கால்கள் முந்தைய திட்டத்தை போலவே இருக்கிறது.
இருப்பினும், மெசேஜ் சலுகையும் லம்ப்-சம் சலுகையில் 300ஆக கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. ஒரு மாதத்துக்கு சிம் கார்டு ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்கள் போதும். டேட்டா சலுகை பெரிதும் வேண்டாம் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பக்கா ஆப்ஷாக இருக்கும். இதைவிட மலிவான விலைக்கு திட்டம் வேண்டுமானால், கடைசி ஆப்ஷனாக ஒரு திட்டம் இருக்கிறது.
ஏர்டெல் ரூ 199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): மாதாந்திர வேலிடிட்டியில் மலிவான விலைக்கும் திட்டமாக இது மட்டுமே இருக்கிறது. இதை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆனால், டேட்டா மொத்தமாகவே 2 ஜிபியாக மட்டுமே கிடைக்கும். 28 நாட்கள் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








