Airtel SIM இருக்கா? ரூ.300 க்கு இறக்கிய 28 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1 ஜிபி டேட்டா!
தினசரிக்கு டேட்டா வேண்டும், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளும் இருக்க வேண்டும். ஆனால், ரீசார்ஜ் விலை ரூ.300 க்குள் இருக்க வேண்டும் என்று கேட்கும் ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு இப்போது பார்க்க இருக்கும் ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) பக்காவாக இருக்கும். சொல்லப்போனால், 28 நாட்களுக்கு தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் மினிமம் ரீசார்ஜ் திட்டமாகவும் இது இருக்கிறது. கூடுதல் சலுகைகளையும் கொடுத்து உள்ளது.
ஏர்டெல் ரூ.299 திட்ட விவரங்கள் (Airtel Rs 299 Plan Details): இதில் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ்கள் (SMS) மட்டுமல்லாமல், கூடுதல் சலுகைகளாக அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium), ஸ்பேம் அலெர்ட் (SPAM Alert) மற்றும் ஹெலோ டியூன்ஸ் (Hello Tunes) கிடைக்கும். இதில் அடோப் சலுகை தவிர மற்ற சலுகைகள் 28 நாட்களுக்கு கிடைக்கும்.

ஆகவே, இந்த ப்ரீபெய் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் (Unlimited Local STD Roaming Calls) கிடைக்கும். நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா (Daily 1 GB Data) சலுகை மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது.
ஏனென்றால், இது தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் மினிமம் ரீசார்ஜ் திட்டமாக இருக்கிறது. டேட்டாவை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. மேலும், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ரூ.4,000 மதிப்புள்ள இந்த சந்தா முற்றிலும் இலவமாக கிடைக்கிறது.
இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் இருக்கும் ஸ்பேம்களை டிடெக்ட் செய்து கொள்ள லைவ் ஸ்பேம் அலெர்ட் சலுகை கிடைக்கிறது. இதற்கு கூடுதல் கட்டணம் கிடையாது. மேலும், ப்ரீ ஹெலோ டியூன்ஸ் சலுகையையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. மினிமம் செலவில் தினசரி டேட்டாவுக்கு இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதைவிட மலிவான விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் தினசரி டேட்டா கிடைக்காது. ஆனால், லம்ப்-சம் டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். கூடவே, முந்தைய திட்டத்தில் கிடைத்த கூடுதல் சலுகைகளும் இருக்கும். அதே நேரத்தில் விலையும் குறைவாக இருக்கும்.
ஏர்டெல் ரூ.199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): முந்தைய திட்டத்தில் கிடைத்த அதே 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் (Unlimited Local STD Roaming Calls) கிடைக்கும். ஆனால், தினசரி டேட்டாவுக்கு பதிலாக மொத்தமாகவே 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஸ்பேம் அலெர்ட் மற்றும் ஹெலோ டியூன்ஸ் சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ப்ரீ கன்டென்ட்கள் மட்டுமே கிடைக்கும். பிரீமியம் கன்டென்ட்களை எதிர்பார்க்க முடியாது.


Click it and Unblock the Notifications








