ஏர்டெல் கஸ்டமர்களுக்கு தீபாவளி.. 1.5GB பிளானில் 2GB டேட்டா.. ரூ 299 பிளானில் அதிகாரப்பூர்வ மாற்றம்!
ஜியோ கஸ்டமர்களே "பரவாயில்லையே பா" என்று சொல்லும் விதமாக ஏர்டெல்லின் ரூ ரூ 299 திட்டத்தில் வழங்கப்பட்டுவந்த டேட்டா சலுகை தடாலடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ மெம்பர்ஷிப் போன்ற பல்வேறு சலுகைகளை அள்ளிக்கொடுக்கிறது. இந்த திட்டம் குறித்த விவரங்கள் இதோ.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், அவற்றின் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிய திட்டங்களை அறிவித்தும், ஏற்கனவே இருக்கும் திட்டங்களில் மாற்றங்களை கொண்டுவந்தும் இருக்கின்றன. ஏனென்றால், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களை விட டேட்டாவுக்கான முக்கியத்துவம் கஸ்டமர்களிடையே அதிகரித்துவிட்டது.

ஓடிடி (OTT), ஆன்லைன் கேமிங் (Online Gaming) பயன்பாடு அந்த அளவுக்கு மக்களிடையே பின்னிப் பிணைந்துவிட்டது. ஆகவே, ப்ரீபெய்ட், போஸ்ட்பெய் மற்றும் ஃபைபர் திட்டங்களில் கூடுதல் டேட்டா மற்றும் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. அந்த வரிசையில், ஏர்டெல்லின் ரூ 299 திட்டத்தின் (Airtel Rs 299 Plan) டேட்டா சலுகை அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் ரூ 299 திட்ட விவரங்கள் (Airtel Rs 299 Plan Details): இதுவொரு டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) ஆகிய சலுகைகளை கொண்ட திட்டமாகும். இந்த திட்டத்தில் முன்னதாக 1.5 ஜிபி தினசரி டேட்டா வழங்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 2 ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்படுள்ளது.
ஆனால், விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா சலுகைகள் வழங்கப்படும். இந்த தினசரி டேட்டா 2 ஜிபியை முழுமையாக பயன்படுத்திவிட்டாலும், அதன் பின்பு, 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து இன்டர்நெட் சேவை கிடைக்கும்.
இந்த ரூ 299 திட்டத்தில் ஏர்டெல் தேங்க்ஸ் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே, ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த டேட்டாவை உங்களது தினசரி டேட்டா காலியான பின்பே பயன்படுத்த முடியும்.
அதோடு மூன்று மாதத்துக்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள் மெம்பர்ஷிப் (Apollo 24|7 Circle Membership) கிடைக்கும். மேலும், விங்க் மியூசிக் ( Wynk Music) மற்றும் ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஏற்கனவே, இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துவந்த நிலையில், இப்போது கூடுதல் டேட்டா வழங்கப்பட்டிருக்கிறது.
மொத்தமாக 14 ஜிபி டேட்டா அதிகமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தைவிட கூடுதல் வேலிடிட்டி வேண்டுமானால், நீங்கள் ரூ 296 விலையில் கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 296 திட்ட விவரங்கள்: இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களுக்கு 25 ஜிபி டேட்டா மொத்தமாக கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு தினசரி லிமிட் கிடையாது. 30 நாட்களில் எந்த நாளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த 25 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், குறைவான வேகத்தில் கூடுதல் டேட்டா கிடைக்காது. ஆகவே, ஒரு எம்பி டேட்டாவுக்கு 50 பைசா வசூலிக்கப்படும். மேலும், ஏர்டெல் தேங்க்ஸ் சலுகையின் கீழ் மூன்று மாதத்துக்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள் மெம்பர்ஷிப், விங்க் மியூசிக் மற்றும் ப்ரீ ஹாலோடியூன்ஸ் சலுகை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications