அக்கடானு ஒரு ரீசார்ஜ்... ரூ.299-க்கு மாசத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. தினமும் டேட்டா.. கம்மி காசுல பக்கா ஆபர்!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு கம்மியான விலைக்கு நாள்தோறும் டேட்டா (Daily Data) மற்றும் வாய்ஸ் கால்கள் (Voice Calls) வேண்டுமானால், அவர்களுக்கு வேற ஆப்ஷனே இல்லாதபடி ஒரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. தினசரி டேட்டாவுடன் கிட்டத்தட்ட மாதம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் திட்டமாக இது இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
கையில் இருக்கும் பணத்தை வைத்து ஒரு மாசத்துக்கு ரீசார்ஜ் செய்யனும். ஆனால், தினமும் டேட்டா கிடைக்கனும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு ஏர்டெல் ரூ 299 திட்டம் (Airtel Rs 299 Plan) சரியாக இருக்கும். ஏனென்றால், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவையும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.

இதேபோல 100 எஸ்எம்எஸ்களை தினமும் அனுப்பி கொள்ள முடியும். எப்போதும் போல வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் என்று கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஒரு மாசத்துக்கு தினசரி டேட்டாவுடன் இதைவிட கம்மியான விலைக்கு திட்டம் கிடைக்காது.
ஒருவேளை இதைவிட மலிவான விலைக்கு தினசரி டேட்டாவுடன் ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று கேட்டால், ஏர்டெல்லில் நிச்சயம் ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால், அதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்காது. வெறும் 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படும். ஆனால், சலுகைகள் முந்தைய திட்டத்தில் கிடைத்தை போலவே கொடுக்கப்படும்.
இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ 249ஆக இருக்கிறது. முன்பே சொன்னதை போல இதில் 24 நாட்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படும். ஆகவே, இந்த நாட்கள் முழுவதும் 1 ஜிபி டேட்டாவை தினந்தோறும் பயன்படுத்தி கொள்ளலாம். அதே நேரத்தில் ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் அனுப்பி கொள்ளலாம். வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் கிடையாது.
24 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை செய்து கொள்ள முடியும். இந்த திட்டங்கள் தினசரி டேட்டாவுடன மலிவான விலைக்கு கிடைப்பவையாகும். ஆகவே, கம்மியான விலைக்கு தினசரி டேட்டா விரும்பும்பட்சத்தில் இந்த திட்டங்களில் ஏதாவது ஒன்றை வேலிடிட்டிக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இவற்றில் கூடுதல் சலுகைகள் இருக்கின்றன.
அதாவது, ஏர்டெல்லில் அண்மையில் சேர்க்கப்பட்ட ஸ்பேம் அலெர்ட் சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது. ஆனால், 24 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், இது ப்ரீ வீடியோக்கள் மற்றும் ஷோக்களை மட்டுமே கொடுக்கும். இறுதியாக முக்கியமான சலுகை ஒன்று உள்ளது.
இந்த 2 திட்டங்கள் மட்டுமல்லாமல், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் ஒட்டுமொத்த திட்டங்களுக்கும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா கொடுக்கப்படுகிறது. இதுவொரு ஏஐ மாடலாகும். ஜெமினி, சாட்ஜிபிடி போன்று பயன்படுத்த கிடைக்கிறது. 12 மாதங்களுக்கு இந்த மெம்பர்ஷிப்பை பயன்படுத்த முடியும். இதன் மதிப்பு ரூ.17,000ஆக இருக்கிறது.
இவ்வளவு மதிப்பு கொண்ட இந்த பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ மாடலானது, ஏர்டெல் கஸ்டமர்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. ஆனால், இதை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் மட்டுமே பெற்று கொள்ள முடியும். ஒவ்வொரு கஸ்டமர்களுக்கும் கிடைப்பதால், அந்த ஆப் மூலம் இதை பெற்று கொள்ளலாம். இதில் பல்வேறு மாடல்களின் இன்டகிரேஷன் இருக்கும்.


Click it and Unblock the Notifications








