அள்ளி கொடுக்கும் ஏர்டெல்.. ரூ.279 போதும்.. நெட்பிளிக்ஸ் சந்தா.. 30ஜிபி டேட்டா.. வேலிடிட்டி?
ஏர்டெல் (Airtel) நிறுவனம் தற்போது ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இதுபோன்ற ஓடிடி சந்தா ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. அதேபோல் ஏர்டெல்லின் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக ஓடிடி நன்மைகளை வழங்குகிறது. இங்கே அந்த திட்டத்தின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 279 Prepaid Plan) நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic), ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் (JioHotstar Super), ஜீ5 பிரீமியம் (ZEE5 Premium), ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) போன்றவற்றின் சந்தாவை வழங்குகிறது.

இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 18க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.
குறிப்பாக ஏர்டெல் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 30ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் கிடையாது. குறிப்பாக டேட்டா மற்றும் ஓடிடி சந்தா நன்மையை மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
ஒருவேளை அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ், ஓடிடி மற்றும் டேட்டா உடன் 84 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல்லின் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளையும் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1729 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் அதிக OTT சந்தா கிடைக்கும்
பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் (zee5 premium) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (airtel xstream play) பிரீமியம் உள்ளிட்ட தரமான ஓடிடி சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம்.

அதுவும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 18க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும். இந்த ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), சலுகை ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
