Home
News

திக்குமுக்காடிய கஸ்டமர்கள்.. ரூ.6.2 செலவில் முடிந்தது.. 45 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் அறக்க பறக்க ரீசார்ஜ் செய்யும் விதமாக நாளொன்றுக்கு ரூ.6.2 செலவில் 45 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொண்ட புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகமாகி இருக்கிறது. இந்த திட்டத்துக்கு மலிவான விலையே நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால், சிம் ஆக்டிவ் திட்டங்களில் இது அதிகப்படியான வேலிடிட்டியை கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்த புதிய ப்ரீபெய்ட திட்டத்தின் (New Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது பார்ப்போம்.

இப்போதெல்லாம், கால் செய்வதற்கு, எஸ்எம்எஸ் அனுபவதற்கு மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதாது, உங்களது சிம் ஆக்டிவாக இருக்க விரும்பினாலும் கட்டாயம் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். இதனால் மலிவான விலையில் கிடைக்கும் திட்டங்களை தவறாமல் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் டெலிகாம் கஸ்டமர்கள் இருக்கின்றனர்.

திக்குமுக்காடிய கஸ்டமர்கள்.. தினசரி ரூ.6.2 போதும்.. 45 நாட்கள் சேவை!

இந்த மலிவான விலையில், யார் அதிக சலுகைகளை கொடுக்கிறார்கள் என்பதில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்களிடையே போட்டி இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், ஜியோ நிறுவனமானது, மற்ற நிறுவனங்களை ஓரங்கட்டிவிட்டு மலிவான விலையில் அதிகப்படியான சலுகைகளை வாரிக் கொடுப்பத்தை மறுக்க முடியாது.

இப்போது, இந்த இடத்துக்கு ஏர்டெல் நிறுவனமும் கிட்டத்தட்ட வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், மலிவான திட்டங்களில் 28 அல்லது 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், ஏர்டெல் 45 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. மற்ற சலுகைகளும் நியாயமாகவே இருக்கின்றன.

ஏர்டெல் ரூ 279 திட்ட விவரங்கள் (Airtel Rs 279 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) என்று மூன்று சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த புதிய திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா சலுகை கிடையாது. ஆகவே, மலிவான விலையில் கிடைக்கும் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இருப்பினும், மற்ற சலுகைகள் வேலிடிட்டி முழுவதும் கிடைக்கும். அதாவது, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம்.

இதுபோக டேட்டாவை போலவே 600 எஸ்எம்எஸ் சலுகை மொத்தமாக கிடைக்கிறது. இதையும் வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும், தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த மூன்று சலுகைகள் போக, ஏர்டெல்லில் வழக்கமாக கிடைக்கும் அப்பல்லோ 24|7 சர்க்கிள் சந்தா மூன்று மாதங்களுக்கு கிடைக்கிறது.

மேலும், ஹலோடியூன்ஸ் (Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகையும் வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 45 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதற்கான தினசரி செலவை பார்த்தால் வெறும் ரூ.6.2 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, சிம் ஆக்டிவ் திட்டங்களில் அதிகப்படியான சலுகை கொண்டதாக இருப்பதை மறுக்க முடியாது.

அதிகப்படியான டேட்டா சலுகையை விரும்பாமல், மலிவான விலையில் அதிக நாட்களுக்கு சிம் ஆக்டிவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்கும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு இந்த ரூ 279 திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். இதுபோன்ற டெலிகாம் செய்திகளுக்கு கிஸ்பாட் தளத்தை பின்தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 279 Plan With 2GB Data, Unlimited Voice Calling, 45 Days Validity Check New Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X