Netflix.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5-க்கு இதை விட்ராதீங்க.. Airtel கொடுக்கும் இலவச சந்தா.. எந்தெந்த பிளான்கள்?
நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், நெட்பிளிக்ஸ் சந்தாவுக்கு மாற டெலிகாம் கஸ்டமர்கள் ரெடியாகிவிட்டனர். ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மூலம் கூடுதலாக நெட்பிளிக்ஸ் கிடைப்பதால், ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்கள் ஓடிடி திட்டங்களை தேடி ரீசார்ஜ் செய்கின்றனர். இதில் ஏர்டெல்லில் (Airtel) கிடைக்கும் நெட்பிளிக்ஸ் திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல்லில் டேட்டா திட்டங்களில் இருந்தே நெட்பிளிக்ஸ் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆரம்ப விலைக்கு ரூ.279 திட்டம் கிடைக்கிறது. இதில் நெட்பிளிக்ஸ் மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு ஓடிடி சந்தா கொடுக்கப்படுகிறது. டேட்டா, வாய்ஸ் கால்களுடன் நெட்பிளிக்ஸ் வேண்டுமானால், ரூ.598 விலை கொண்ட திட்டத்துக்கு செல்ல வேண்டும்.

ஏர்டெல் ரூ 279 திட்டம் (Airtel Rs 279 Plan): இந்த திட்டத்துக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்காது. ஆகவே, இதை பெறுவதற்கு ஏற்கனவே உங்களிடம் ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். இந்த திட்டத்தை பெற்ற பிறகு 1 ஜிபி டேட்டா கிடைக்கும். 1 மாதத்துக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்களில் நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தாவை கஸ்டமர்கள் பெறலாம்.
இதுபோக ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா கொடுக்கப்படும். மேலும், ஜீ5 பிரீமியம் சந்தா கொடுக்கப்படும். அதேபோல ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவும் கிடைக்கும். இதில் சோனிலிவ் உள்ளிட்ட 20+ ஓடிடி ஆப்கள் கிடைக்கும். ஆகவே, நெட்பிளிக்ஸ் மட்டுமல்லாமல், கூடுதலாக ஓடிடி வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். வாய்ஸ் கால்களுக்கு அடுத்த திட்டம் சரியாக இருக்கும்.
ஏர்டெல் ரூ 598 திட்டம் (Airtel Rs 598 Plan): இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. இதிலும் நெட்பிளிக்ஸ் மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு ஓடிடி சந்தா கிடைக்கிறது.
ஆகவே, நெட்பிளிக்ஸ் பேசிக் மட்டுமல்லாமல், ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ பிரீமியம் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தா கிடைக்கும். மேலும், ஸ்பேம் அலெர்ட் சலுகை, ப்ரீ காலர் டியூன் சலுகை மற்றும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 1729 திட்டம் (Airtel Rs 1729 Plan): இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த நாட்களில் நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தா கிடைக்கும். இதுபோக ஜியோஹாட்ஸ்டார் சூப்பர், ஜீ5 பிரீமியம், எக்ஸ்ட்ரீம் பிளே சலுகை கிடைக்கிறது. மற்ற சலுகைகளை பார்க்கையில், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை கொடுக்கிறது.
மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்களை 84 நாட்கள் முழுவதும் செய்து கொள்ளலாம். இதேபோல சலுகைள் கூடுதல் டேட்டாவுடன் வேண்டுமானால், அதிக விலை கொண்ட மற்றொரு திட்டம் இருக்கிறது. சொல்லப்போனால், ஏர்டெல்லில் அதிக விலைக்கு கிடைக்கும் நெட்பிளிக்ஸ் சந்தா கொண்ட திட்டமாகவும் இருக்கிறது. இதன் விவரங்களை பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ 1798 திட்டம் (Airtel Rs 1798 Plan): முந்தைய திட்டத்தை போல இதிலும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில் நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தா கிடைக்கும். மற்ற ஓடிடிகள் இருக்காது. ஆனால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், ஸ்பேம் அலெர்ட் போன்ற வழக்கமாக சலுகைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








