TV எதுக்குங்க.. ஒரே Airtel ரீசார்ஜ்.. ரூ.279-க்கு அள்ள அள்ள குறையாத சலுகை.. 1 மாத வேலிடிட்டி.. 1 ஜிபி டேட்டா!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் மலிவான விலைக்கு நம்ப முடியாத சலுகைகளை ஒரு மாதத்துக்கு பெற வேண்டுமனால், அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ரூ.279 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஒட்டுமொத்த பிரீமியம் ஓடிடி ஆப்களின் சலுகைகள் இதில் கிடைக்கின்றன. அதிலும், இந்த சந்தாவானது, பேசிக்காக இல்லாமல், பிரீமியமாக கிடைக்கின்றன. இந்த ஏர்டெல் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இதுவொரு டேட்டா திட்டமாக இருக்கிறது. அதோடு ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. மலிவான விலைக்கு கிடைப்பதால், பிரீமியம் ஓடிடிகள் இருக்காது என்று நினைத்துவிடாதீர்கள். நெட்பிளிக்ஸ் பேசிக், ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் மற்றும் ஜீ5 பிரீமியம் உள்ளிட்ட பட்டையை கிளப்பும் ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 279 ஓடிடி திட்ட விவரங்கள் (Airtel Rs 279 OTT Plan Details): இதுவொரு டேட்டா திட்டமாக இருப்பதால், 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதோடு 1 மாத வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறுவதற்கு உங்களிடம் ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். இந்த ஓடிடி ஆப்களுக்கு 30 நாட்கள் சந்தா கொடுக்கப்படுகிறது.
முதலில் பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவை பார்த்துவிடுவோம். இந்த ஏர்டெல் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic), ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் (JioHotstar Super) சந்தா மற்றும் ஜீ5 பிரீமியம் (ZEE5 Premium) ஆகிய முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. மொபைல் மட்டுமல்லாமல், டிவி, லேப்டாப் போன்ற டிவைஸ்களில் பார்க்கலாம்.
இதுபோக ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேமாக கொடுக்கப்பட்டு வரும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தாவும் இதில் கிடைக்கிறது. இதில் மொத்தமாக 25+ ஓடிடி ஆப்களின் சந்தா மொத்தமாக கொடுக்கப்படும். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் எக்ஸ்ட்ரீம் பிளே ஆப் மூலமாக இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
இது டிவிகளுக்கும் பொருந்தும். ஆகவே, ஆண்ட்ராய்டு டிவிகளில் இந்த ஆப்களை பயன்படுத்தி கொள்ள முடியும். இப்போது, எந்தெந்த ஓடிடி ஆப்கள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் பண்டிலின் கீழ் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), சன்நெக்ஸ்ட் (SunNXT) ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.
மேலும், சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), எபிக் ஆன் (Epic On), சோஷியல் ஸ்வாக் (Social Swag) கிடைக்கிறது இதுபோக கான்ச்சா லங்கா (Kanccha Lanka) கிளிக் (Klikk), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), ஹங்கமா (Hungama) மற்றும் ஃபேன் கோட் (Fan Code) சந்தா கிடைக்கிறது.
அதேபோலோ ஈராஸ் நவ் (Eros Now), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), டாகுபே (Docubay), டாலிவுட்பிளே (Dollywood Play), அல்ட்ரா (Ultra), சாவ்பால் (Chaupal), டாலிவுட்பிளே (Dollywood Play), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) ஆகிய ஓடிடி ஆப்களையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டம் உண்மையில் அதிகப்படியான ஓடிடிகளை கொடுக்கிறது.
டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வேண்டாம், ஓடிடி மட்டும் அதிகமாக கிடைக்கும் திட்டம் வேண்டும் என்றால், இந்த மலிவு விலை திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், ரூ.300 விலைக்கும் கம்மியாக அதிகப்படியான டேட்டா சலுகைகளை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. இதே போல பல்வேறு திட்டங்கள் ஏர்டெல்லில் உள்ளன.


Click it and Unblock the Notifications








