ஏர்டெல் வேற மாறி.. ரூ.279-க்கு மொத்தமும் முடிந்தது.. 1 மாத வேலிடிட்டி.. 1 ஜிபி டேட்டா.. 20+ ஓடிடி சந்தா!
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) கஸ்டமர்களுக்கு 1 மாத வேலிடிட்டியில் அதிகப்படியான ஓடிடி ஆப்களின் சந்தா வேண்டுமானால், கண்ணை மூடிக்கொண்டு இந்த ப்ரீபெய்ட் டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதில் நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 பிரீமியம் மட்டுமல்லாமல், சோனிலிவ் உள்ளிட்ட 20+ ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முழு சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஓடிடி ஆப்களின் சந்தா கொண்ட திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும், ஏற்கனவே ஆக்டிவாக இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்தும்போது, கம்மியான விலைக்கு அதிக ஓடிடிகளை பெற்று கொள்ள முடிகிறது. இதில் டேட்டாவும் வேலிடிட்டியும் கிடைக்கும். இந்த திட்டமும் அப்படித்தான் சலுகைகளை கொடுத்துள்ளது.

ஏர்டெல் ரூ. 279 திட்ட விவரங்கள் (Airtel Rs 279 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 1 மாத வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, எந்த தேதியில் ரீசார்ஜ் செய்யப்படுகிறதோ அதே தேதியில் அடுத்த மாதம் வரையில் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால், இதற்கு போஸ்ட் டேட்டா கொடுக்கப்படாது.
மேலும், நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தா கிடைக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் (JioHotstar Super) சந்தா கிடைக்கிறது. ஜீ5 பிரீமியம் (Zee5 Premium) சந்தா கொடுக்கப்படுகிறது. சோனிலிவ் (SonyLIV) சந்தாவும் இதில் கிடைக்கிறது. இந்த பிரீமியம் ஓடிடி சந்தா போக எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவின் கீழ் 20+ ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஆஹா (Aha), சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi) உள்ளிட்ட ஆப்களின் சந்தா கிடைக்கும். இதேபோல அதிக ஓடிடி சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதலாக வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வேண்டுமானால், மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் சரியாக இருக்கும். இந்த திட்டத்தை பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ. 598 திட்ட விவரங்கள் (Airtel Rs 598 Plan Details): 28 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் கால்கள் (Unlimited Local, STD & Roaming Calls) கொடுக்கப்படும். மேலும், 2 ஜிபி டேட்டா சலுகைகளை தினமும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு பிறகு போஸ்ட் டேட்டா உள்ளது.
இந்த போஸ்ட் டேட்டாவை 64 கேபிபிஎஸ் வேகத்தில் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த டேட்டா சலுகை போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படும். ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் ஏகப்பட்ட டேட்டா சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டம் கொடுத்துள்ளது.
இந்த சலுகைகள் எல்லாம் போக ஏகப்பட்ட ஓடிடி ஆப்களின் சந்தாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இதில் நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தா இருக்கிறது. மேலும், ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா கொடுக்கப்படுகிறது. அதேபோல ஜீ5 பிரீமியம் சந்தாவையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். அதேபோல எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா கொடுக்கப்படுகிறது.
இதில் 20+ ஓடிடி ஆப்களை பெற்று கொள்ளலாம். ஸ்பேம் பில்டர் சலுகை கிடைக்கிறது. மேலும், ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ சந்தாவும் இதில் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையுடன் ஓடிடி சந்தா வருவதால், நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








