அள்ளி தரும் Airtel.. கம்மி பட்ஜெட்ல தினசரி டேட்டா.. நெட்பிளிக்ஸ் சந்தா.. வாய்ஸ் கால்கள்.. யாரு விடுவா?
ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. அதுவும் தற்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் ஓடிடி சந்தா இருப்பதால் தான் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் நெட்பிளிக்ஸ் (Netflix) தரும் இரண்டு திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 598 Prepaid Plan) ஆனது பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வழங்குகிறது. மேலும் ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் போன்ற ஓடிடி சந்தாக்கள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium)இந்த திட்டம் மூலம் பயன்படுத்த முடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.598 திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 279 Prepaid Plan) 1ஜிபி டேட்டா நன்மை மட்டுமே வழங்கும். மேலும் நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic), ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் (JioHotstar Super), ஜீ5 பிரீமியம் (ZEE5 Premium), ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) போன்றவற்றின் சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கும்.
அதேசமயம் ஏர்டெல் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் கிடையாது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். ஓடிடி நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் மட்டும் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது. அதேபோல் அமேசான் பிரைம் லைட் சந்தா விரும்பும் பயனர்கள் ரூ.838 திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்
இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (Amazon Prime Lite Subscription) கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது.

அதேபோல் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








