திடீரென ரூ.265 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானில் சூப்பர் சலுகையை அறிவித்த Airtel.!

|

ஏர்டெல் நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக பல அசத்தலான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஏர்டெல் நிறுவனம்

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ஸ்மார்ட் ரீசார்ஜ்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் ரூ.265 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் கூடுதல்
சலுகையைகூட அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது அந்நிறுவனம் அறிவித்த கூடுதல் சலுகையைப் பார்ப்போம்.

கம்மி கரண்ட் பில்லுடன் சில்லுனு காத்து வேணுமா? வந்தாச்சு புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2!கம்மி கரண்ட் பில்லுடன் சில்லுனு காத்து வேணுமா? வந்தாச்சு புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2!

ஏர்டெல் ரூ.265 பிளான்

ஏர்டெல் ரூ.265 பிளான்

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் பிளான் ஆனது முன்பு 1ஜிபி தினசரி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டம் திருத்தப்பட்டுள்ளது. தற்போது ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் பிளான் தினசரி 1.5ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது.

இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்புகள், விங்க் மியூசிக், ஹலோ ட்யூன் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்.

ஆனால் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டத்தில் தற்போது வழங்கப்பட்ட இந்த புதிய நன்மைகள் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று 91mobiles வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் சில அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.

என்ன ராசா சொல்ற? Swiggy பேக் உடன் குதிரையில் போன பையன் நீயா? ஸ்விகி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!என்ன ராசா சொல்ற? Swiggy பேக் உடன் குதிரையில் போன பையன் நீயா? ஸ்விகி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஏர்டெல் ரூ.299 ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் ரூ.299 ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக், அப்பல்லோ 24/7, இலவச ஹலோ டியூன், ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் போன்ற பல நன்மைகள் உள்ளன. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

Jio, Airtel, Vi: தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் நன்மை.. OTT கூட இருக்கா? இது தெரியாம போச்சே!Jio, Airtel, Vi: தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் நன்மை.. OTT கூட இருக்கா? இது தெரியாம போச்சே!

ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ் திட்டதில் தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மை உள்ளது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் மூன்று மாதங்களுக்கு அணுகல், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, அப்பல்லோ 24|7 சர்க்கிள்,விங்க் மியூசிக், இலவச ஹலோ டியூன் உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் உள்ளன.

குறிப்பாக இந்த ஏர்டெல் ரூ.399 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

இந்த OnePlus 10T போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்: எப்போது அறிமுகம்?இந்த OnePlus 10T போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்: எப்போது அறிமுகம்?

ஏர்டெல் ரூ.359 ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் ரூ.359 ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் ரூ.359 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.359 ரீசார்ஜ் திட்டம்.

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக், இலவச ஹலோ டியூன் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது ஏர்டெல் ரூ.359 ரீசார்ஜ் பிளான்.

Xiaomi 12 வரிசையில் இப்படி ஒரு Lite வெர்ஷன் மாடலா? மக்கள் அதிகம் கவர்ந்த புதிய Xiaomi 12 Lite இதான்Xiaomi 12 வரிசையில் இப்படி ஒரு Lite வெர்ஷன் மாடலா? மக்கள் அதிகம் கவர்ந்த புதிய Xiaomi 12 Lite இதான்

 ஏர்டெல் ரூ.319 பிளான்

ஏர்டெல் ரூ.319 பிளான்

ஏர்டெல் வழங்கும் ரூ.319 பிளான் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக்,அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக், இலவச ஹலோ டியூன் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த ஏர்டெல் ரூ.319 திட்டத்தின்வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

பெயர் தான் லைட்டு, மற்றபடி எல்லாமே வெயிட்டு; Xiaomi 12 Lite அறிமுகம்: விலை, அம்சங்கள்!பெயர் தான் லைட்டு, மற்றபடி எல்லாமே வெயிட்டு; Xiaomi 12 Lite அறிமுகம்: விலை, அம்சங்கள்!

ஏர்டெல் ரூ.479 ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் ரூ.479 ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் ரூ.479 ரீசார்ஜ் பிளான் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ரூ.100 ஃபாஸ்டேக் கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக், இலவச ஹலோ டியூன் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.479 திட்டம். அதேபோல் இதன் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

News Source: 91mobiles

Best Mobiles in India

English summary
Airtel Rs 265 Prepaid Plan Revised: Full Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X