Home
News

இனி லிமிட்டே கிடையாது.. வெறும் ரூ.265 போதும்.. அன்லிமிடெட் 5G.. 1GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

ஜியோவுக்கு நிகராக ஏர்டெல்லில் அன்லிமிடெட் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் வெறும் ரூ.265 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி மற்றும் சலுகைகள் குறித்த முழு விவரம் இதோ.

இந்தியாவில் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் மட்டுமே, 5ஜி சேவையை வழங்கிவருகின்றன. இப்போது, பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. இந்த சேவையை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க 2 நிறுவனங்களுக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இலவசமாக வழங்கி வருகின்றன.

வெறும் ரூ.265 போதும்.. அன்லிமிடெட் 5G.. 1GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

அதாவது, 5ஜி டேட்டா சலுகை கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும், அந்த திட்டத்தின் டேட்டா முடிந்த பிறகு அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவது கிடையாது. இதுபோன்ற திட்டங்கள் மலிவான விலையிலும் கிடைக்கின்றன. அந்த வரிசையில், ஏர்டெல்லில் மலிவான விலையில் கிடைக்கும் 2 திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி சலுகை கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 265 திட்ட விவரங்கள் (Airtel Rs 265 Plan Details): ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Airtel Unlimited 5G Data) சலுகை கொண்ட திட்டங்களில் மிகவும் மலிவான விலையில் இந்த திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 56 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த தினசரி டேட்டாவை முழுமையாக பயன்படுத்திவிட்டாலும், அதன்பின்பு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதோடு ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் ஏரியாக்களில் (Airtel 5G Network Areas) அன்லிமிடெட் டேட்டா இலவசமாக கிடைக்கும்.

அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் சலுகை கிடைக்கிறது. அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) சலுகையும் பொருந்தும். ஆகவே, விங்க் மியூசிக் ப்ரீ (Wynk Music Free) மற்றும் ப்ரீ ஹாலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

ஒருவேளை உங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டும் என்றால், ரூ.296 விலையில் கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் சில கூடுதல் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் சலுகைகள் குறித்து பார்ப்போம்.

ஏர்டெல் ரூ 296 திட்ட விவரங்கள் (Airtel Rs 296 Plan Details): இந்த திட்டத்தில் தினசரி டேட்டாவுக்கு பதிலாக 25 ஜிபி பல்க் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பல்க் டேட்டாவை, வேலிடிட்டி முடியும் முன்பே பயன்படுத்தி விட்டாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த திட்டத்துக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. அதோடு ஏர்டெல் தேங்க்ஸ் சலுகைகளான அன்லிமிடெட் 5ஜி டேட்டா, விங்க் மியூசிக் மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது.

இதுபோக மூன்று மாதத்துக்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஏர்டெல் 5ஜி ஏரியாக்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை குறைந்த விலை திட்டத்தில் பயன்படுத்த வேண்டுமானால், இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 265 Plan Details, Airtel, Airtel Prepaid Plan, Airtel 1GB Data Plan, Airtel Unlimited 5G Data, Airtel Rs 265 Plan Validity, Airtel Rs 265 Plan Calls, Airtel Rs 265 Plan Recharge, Airtel Rs 265 Plan 5G, Airtel Unlimited 5G Offers, Airtel Unlimited 5G Plan, Airtel 28 Days Validity Plan, Telecom, Technology, News, ஏர்டெல் ரூ 265 திட்ட விவரங்கள், ஏர்டெல், ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம், ஏர்டெல் 1 ஜிபி டேட்டா திட்டம், ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஏர்டெல் ரூ 265 பிளான் வேலிடிட்டி, ஏர்டெல் ரூ 265 திட்ட கால்கள், ஏர்டெல் ரூ 265 பிளான் ரீசார்ஜ், ஏர்டெல் ரூ 265 பிளான் 5ஜி, ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி, ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி திட்டங்கள், ஏர்டெல் 28 நாட்கள் வேலிடிட்டி திட்டம், டெலிகாம், தொழில்நுட்பம், செய்திகள்,
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X