Home
News

Airtel சிம் இருக்கா.. இனி ரூ.249 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. நாள்தோறும் 1 ஜிபி டேட்டா.. குஷியில் கஸ்டமர்கள்!

ஏர்டெல் சிம் கார்டு (Airtel SIM Card) வைத்திருக்கும் ஒவ்வொரு கஸ்டமர்களும் குஷியாகும்படியான மலிவு விலை திட்டங்கள் (Cheapest Plans) களமிறக்கப்பட்டு இருக்கின்றன. உங்களிடம் வெறும் ரூ.249 இருந்தால் போதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், எஸ்எம்எஸ்கள் மற்றும் கூடுதல் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இனிமேல் ரீசார்ஜ் செய்யும்போது, இந்த மூன்று மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

ஏர்டெல் ரூ 249 திட்ட விவரங்கள் (Airtel Rs 249 Plan Details): தினசரி டேட்டா கொடுக்கும்படி மலிவு விலை திட்டம் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அந்த 1 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. இதற்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்காது.

Airtel சிம் இருக்கா.. இனி ரூ.249 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. டேட்டா!

24 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கிறது. மேலும், டேட்டாவை போலவே நாளொன்றுக்கு கணக்கில் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம். மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தா (Airtel Xstream App Subscription), ஸ்பேம் கால்கள் (Spam Calls) அலெர்ட் கிடைக்கிறது.

இதுபோக, ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் (Spam SMS Alert) கிடைக்கிறது. ஹலோடியூன்ஸ் சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இதற்கு அடுத்து லம்ப்-சம் டேட்டாவில் கிடைக்கும் திட்டங்களே மலிவான விலைக்கு கிடைக்கின்றன. ஆகவே, இதில் கூடுதல் வேலிடிட்டியை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த திட்டங்களின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 219 திட்ட விவரங்கள் (Airtel Rs 219 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டாவுக்கு பதிலாக லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 3 ஜிபி டேட்டாவை மட்டுமே மொத்தமாக பெற்று கொள்ளலாம். இதற்கு பிறகு டேட்டாவை பயன்படுத்தினால், கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும். ஆனால், மற்ற சலுகைகள் அப்படி கிடையாது.

ஆகவே, முந்தைய திட்டத்தில் பார்த்ததை போலவே, அன்லிமிடெட் லோக்கல் கால்கள், எஸ்டிடி கால்கள் மற்றும் ரோமிங் கால்கள் வருகின்றன. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தா, ஸ்பேம் கால்கள் அலெர்ட் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் சலுகை கிடைக்கிறது. மேலும், ஹலோடியூன்ஸ் சலுகையும் வருகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதற்கு அடுத்து வரும் திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், இதைவிட மலிவான விலைக்கு அந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம். அதேபோல அதிலும் லம்ப்-சம் டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டியில் சலுகைகள் கிடைக்கும். இந்த நாட்களுக்கு 2 ஜிபி டேட்டாவை மட்டுமே பெற முடியும். இதில் போஸ்ட் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது. இந்த டேட்டாவுக்கு அடுத்தப்படியாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இதிலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தா, ஸ்பேம் கால்கள் அலெர்ட், ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் மற்றும் ஹலோடியூன்ஸ் சலுகைகள் வருகின்றன. இந்த திட்டத்தில் உங்களுக்கான பெஸ்ட் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். கம்மியான பட்ஜெட்டில் இந்த திட்டங்களே நல்ல சாய்ஸ்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 249 Plan With 24 Days Validity 1GB Data Unlimited Voice Calls Check 3 Cheapest Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X