Home
News

Airtel போட்ட போடு.. இனிமே 1ஜிபி திட்டம் இங்க மட்டும்தான்.. ரூ.249 இல்லனா.. ரூ.299-க்கு வருது.. வாய்ஸ் கால்கள்!

ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) நிறுவனங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவை தொடங்கிய பிறகு கம்மியான டேட்டாவுடன் கிடைக்கும் திட்டங்கள் குறைக்கப்பட்டன. அதோடு டெலிகாம் கட்டணங்கள் உயர்ந்த பிறகு ஜியோவில் தினசரிக்கு 1 ஜிபி டேட்டா கொடுக்கும் திட்டம் ஒன்று மட்டுமே இருந்தது. ஏர்டெல்லில் 2 திட்டங்கள் இருக்கிறது. இப்போது, ஜியோவில் அந்த ஒரு திட்டமும் நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. ஏர்டெல்லில் இப்போதைக்கு கிடைக்கும் 1 ஜிபி டேட்டா திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். இதுவும் நீக்கம் செய்யப்படலாம்.

ஏர்டெல் ரூ 249 திட்ட விவரங்கள் (Airtel Rs 249 Plan Details): ஒரு நாளுக்கு 1 ஜிபி டேட்டா வேண்டுமானால், ஆரம்ப விலைக்கு கிடைக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 24 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம்.

Airtel போட்ட போடு.. இனி 1ஜிபி திட்டம் இங்க மட்டும்தான்.. ரூ.249-க்கு!

இந்த 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மட்டுமே கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்காது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும்.

இந்த சலுகைகளுக்கு அடுத்தாக பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா 12 மாதங்களுக்கு கிடைக்கிறது. மேலும், ஸ்பேம் கால் & எஸ்எம்எஸ் அலெர்ட் சலுகையை பெற்று கொள்ளலாம். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சலுகையும் இதற்கு கிடைக்கிறது. ஆனால், இது பிரீமியம் கன்டென்ட்களை கொடுக்காது, ப்ரீ கன்டென்ட்களை மட்டுமே கொடுக்கும்.

24 நாட்கள் வேலிடிட்டி குறைவாக தெரிகிறது. மாத வேலிடிட்டி கொண்ட 1 ஜிபி டேட்டா திட்டம் இருந்தால், சொல்லுங்கள் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு ஏர்டெல் ரூ 299 ப்ரீபெய்ட் திட்டம் சரியாக இருக்கும். இதில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் முந்தைய திட்டத்தில் கிடைத்த சலுகைகள் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 299 திட்ட விவரங்கள் (Airtel Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 28 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதற்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்காது. ஆனால், 1 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

அதேபோல வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் என்று செய்ய கிடைக்கிறது. மேலும், 12 மாதங்களுக்கான பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா மற்றும் ஸ்பேம் கால் & எஸ்எம்எஸ் அலெர்ட் சலுகையை கொடுக்கிறது.

இதில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சலுகை கிடையாது. ஜியோவுடன் ஒப்பிடுகையில் ஏர்டெல்லில் மட்டுமே இப்போதைக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோவில் நீக்கம் செய்யப்பட்டுவிட்டதால், ஏர்டெல்லிலும் நீக்கம் செய்யப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், கிட்டத்தட்ட ஒரே சலுகைகளைத்தான் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து கொடுத்து இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 249 Plan Rs 299 Plan With Unlimited Voice Calls Check 1GB Daily Data Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X