ஏர்டெல் போட்ட போடு.. மாதாந்திரம் ரூ.187 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 30 ஜிபி டேட்டா!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ஒட்டுமொத்த ப்ரீபெய்ட் கஸ்டமர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி மாதாந்திரம் வெறும் ரூ 187 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), லம்ப்-சம் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன. இதுபோக ரூ 17,000 மதிப்புள்ள பெர்ப்லெக்ஸிடி சந்தா 12 மாதங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இப்படி நம்ப முடியாத சலுகைகளை கொடுக்கும் இந்த வருடாந்திர திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 2249 திட்ட விவரங்கள் Airtel Rs 2249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 12 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான மாத செலவை கணக்கிட்டால் வெறும் ரூ 187ஆக மட்டுமே இருக்கிறது.

இந்த விலைக்கு சலுகைகள் கிடைப்பது என்பது வருடாந்திர வேலிடிட்டியை தேர்ந்தெடுக்கும்போது மட்டுமே கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு உங்களுக்கு 30 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இது மொத்த டேட்டா சலுகையாகும். ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டி என்றால், அந்த நாட்கள் முழுவதுக்கும் இந்த டேட்டா மட்டுமே கிடைக்கும்.
இந்த டேட்டாவுக்கு தினசரி லிமிட் (Daily Limit) மற்றும் போஸ்ட் டெட்டா (Post Data) சலுகைகள் கிடைக்காது. ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டி முன்பாகவே 30 ஜிபி டேட்டாவையும் பயன்படுத்தி முடித்துவிட்டதால், உங்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டும் தொடர்ந்து கிடைக்கும். ஆகவே, சிம் ஆக்டிவ் வருடம் முழுவதும் உறுதியாக கிடைக்கிறது.
இந்த டேட்டா சலுகையை போலவே எஸ்எம்எஸ் சலுகையும் மொத்தமாகவே கிடைக்கிறது. தினசரிக்கு 100 என்னும் கணக்கு இல்லாமல், மொத்தமாக 3600 எஸ்எம்எஸ்கள் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்பட்டுவிடும். இதன் மூலம் தேவைப்படும்போது, கஸ்டமர்கள் அந்த எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இதற்கு அடுத்து வாய்ஸ் கால்கள் சலுகை இருக்கிறது.
இது வழக்கம்போலவே கஸ்டமர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 365 நாட்கள் முழுவதும் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போல கணக்கு இல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) என்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 30 நாட்களுக்கு ஒரு முறை என்னும் கணக்கில் ஹலே டியூன்ஸ் கிடைக்கிறது.
ஆகவே, 12 மாதங்களுக்கு 12 முறை இலவச ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையை பெற்று கொள்ளலாம். அதே நேரத்தில் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வரும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் இருக்கும் ஸ்பேம்களை தெரிந்து கொள்ளவதற்காக ஸ்பேம் அலெர்ட் (Spam Alert) சலுகையும் இந்த வருடாந்திர திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சலுகைகளுக்கு அடுத்து பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity AI Pro) சந்தாவை ஏர்டெல் நிறுவனம் கொடுக்கிறது. அதுவும் 12 மாதங்களுக்கு கொடுத்தது, கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ 17,000ஆக இருக்கிறது. இதனை ஏர்டெல் கஸ்டமர்கள் முழுவதும் இலவமாக பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி ஒட்டுமொத்தமாக இந்த திட்டம் பின்னியெடுக்கிறது.
ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், கூடவே போதுமான அளவுக்கு டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதேபோல டேட்டா வவுச்சரும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. எப்படி பார்த்தாலும், மாதத்துக்கு ரூ 187 என்பது மலிவான விலையாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








