உங்ககிட்ட Airtel SIM இருக்கா.. ரூ.2249 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 30ஜிபி டேட்டா..
ஏர்டெல் (Airtel) நிறுவனம் சமீபத்தில் பல அசத்தலான கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியது. ஆனாலும் இந்நிறுவனம் இப்போதும் பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.2249 விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டத்தை வைத்துள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகளை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 2249 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை இந்த திட்டம் மூலம் பெற முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா, ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் உள்ளிட்ட நன்மைகளும் இந்த அசத்தலான ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்கள் நன்மைகளை மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல்லின் ரூ.2249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. ஒருவேளை 365 நாட்கள் வேலிடிட்டி உடன் டேட்டா நன்மை வேண்டும் என எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல்லின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா, உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற18க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.


Click it and Unblock the Notifications