Home
News

Airtel சிம் இருக்கா.. அடுத்த 365 நாட்கள் கதை முடிந்தது.. உடனே இதை ரீசார்ஜ் பண்ணிடுங்க.. வாய்ஸ் கால், டேட்டா!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தின் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் அடுத்த 365 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் கவலையில்லாமல் இருக்க வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக் கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். 2026 ஆம் ஆண்டில் டெலிகாம் கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெலிகாம் கட்டணங்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் திட்டங்களின் விலையை உயர்த்தாமல், மலிவு விலை திட்டத்தை நீக்கம் செய்தன. அதேபோல சில திட்டங்களின் சலுகைகளை குறைத்தன. இதனால், டெலிகாம் கட்டண உயர்வு அடுத்த வருடம் இருக்கும் என்று அடித்து சொல்லலாம்.

Airtel சிம் இருக்கா.. அடுத்த 365 நாட்கள் கதை முடிந்தது.. இதை பண்ணுங்க!

ஆகவே, இப்போதே 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், கட்டணம் உயர்ந்தாலும் கவலைப்பட வேண்டியது கிடையாது. இதனால், மலிவு விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டங்களை டெலிகாம் கஸ்டமர்கள் அடித்து பிடித்து ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இதில் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு ரூ.2249 திட்டம் பக்கா தேர்வாக இருக்கிறது.

ஏர்டெல் ரூ. 2249 திட்டம் (Airtel Rs 2249 Plan): இந்த திட்டம் மலிவான விலைக்கு டேட்டாவுடன் கிடைக்கும் வருடாந்திர திட்டமாக இருக்கிறது. ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், கூடவே டேட்டா சலுகையையும கொடுக்கிறது. வெறும் வாய்ஸ் ஒன்லி திட்டமாக இல்லாமல், டேட்டாவையும் இதில் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தவுடன் 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் (Unlimited Local, STD, Roaming Voice Calls) செய்ய கிடைக்கிறது. மேலும், இந்த திட்டத்தில் 30 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இது லம்ப்-சம் சலுகையில் கிடைக்கும் டேட்டாவாக இருக்கிறது. ஆகவே, லிமிட் ஏதும் இல்லாமல் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த லம்ப்-சம் டேட்டா முடிந்த பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும் என்று நினைத்து விடாதீர்கள். இந்த திட்டத்துக்கு போஸ்ட் டேட்டா சலுகை பொருந்தாது. ஆகவே, கூடுதலாக டேட்டாவை பயன்படுத்த டேட்டா வவுச்சர் தேவைப்படும். இப்போது, எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு வருவோம். டேட்டாவை போல லம்ப்-சம் சலுகையில் இது கிடைக்கிறது.

ஆகவே, 3600 எஸ்எம்எஸ்களை லம்ப்-சம் சலுகையில் பெற்று கொள்ளலாம். இந்த சலுகையையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். தினசரிக்கு லிமிட் ஏதும் கொடுக்கப்படவில்லை. இந்த மூன்று சலுகைகளுக்கு அடுத்தும் சில சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் கொடுத்துள்ளது. இதில் வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், 30 நாட்களுக்கு ஒரு டியூன் மட்டுமே வைத்து கொள்ள முடியும். மேலும், இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் வரும் ஸ்பேம் கால்களை டிடெக்ட் செய்ய ஸ்பேம் அலெர்ட் சலுகை கொடுக்கப்படுகிறது. பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ சந்தாவும் இந்த வருடாந்திர திட்டத்துக்கு கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் போதுமானால் மற்றொரு திட்டம் இருக்கிறது.

ஏர்டெல் ரூ. 1849 திட்டம் (Airtel Rs 1849 Plan): இந்த திட்டத்தில் டேட்டா மட்டும் கிடைக்காது, மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். ப்ரீ ஹலோ டியூன்ஸ், ஸ்பேம் அலெர்ட், பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ சந்தாவும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 2249 Plan With Local STD Roaming Calls 30GB Data Best Recharge Plan For Next 365 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X