ஏர்டெல் விஸ்வரூபம்.. மாதம் ரூ.187 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ், டேட்டா.. ஆனால், ஜியோ கிட்ட இல்லை!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முக்கிய டெலிகாம் நிறுவனங்களானது, டிராய் (TARI) உத்தரவின்படி வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய திட்டங்களை கொண்டுவந்தன. ஆனால், ஏற்கனவே கிடைத்த வேல்யூ திட்டங்களை தூக்கிவிட்டன. இப்படிப்பட்ட நேரத்தில் ஏர்டெல் நிறுவனம், மாதத்துக்கு வெறும் ரூ.187 செலவில் கிடைக்கும் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகளை கொடுத்து, ஜியோவை தூக்கி சாப்பிட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் இதோ.
வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கொண்ட திட்டங்கள் வருவதற்கு முன்பு ஜியோவின் ரூ 1899 திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைத்தன. அதேபோல ஏர்டெல்லின் ரூ 1999 திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் கிடைத்தன.

ஆனால், ஜியோ நிறுவனம் வாய்ஸ் கால்கள் மட்டுமே கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்த பிறகு ரூ 1899 விலையிலான திட்டத்தை நீக்கிவிட்டது. ஆனால், ஏர்டெல் அப்படி செய்யவில்லை. ரூ 1999 திட்டத்தை தூக்காமல் கூடுதல் சலுகைகளை கொடுத்து, ரூ 2249ஆக விலையை மட்டுமே அதிகரித்தது. ஆகவே, இப்போது டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைள் கொண்ட திட்டங்களில் ஏர்டெல் முந்திவிட்டது.
இந்த திட்டத்தின் சலுகையையும் இப்போது ஜியோவில் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் ரூ 3599 திட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்து எந்த திட்டத்தில் அதிக சலுகைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். இதில் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 2249 திட்டம் மாதத்துக்கு வெறும் ரூ 187 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது.
ஏர்டெல் ரூ 2249 திட்ட விவரங்கள் (Airtel Rs 2249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் டேட்டாவும் கிடைக்கிறது. ஆகவே, 30 ஜிபி டேட்டாவை பெறலாம்.
இதுவொரு லம்ப்-சம் டேட்டாவாக இருந்தாலும், போஸ்ட் டேட்டா சலுகை கிடையாது. ஆகவே, 30 ஜிபி டேட்டாவை 365 நாட்கள் வேலிடிட்டி முன்பாகவே பயன்படுத்திவிட்டால், கூடுதல் டேட்டாவுக்கு கட்டணங்கள் இருக்கும். எஸ்எம்எஸ் சலுகையும் லம்ப்-சம் சலுகையில் மொத்தமாக 3,600ஆக அனுப்பி கொள்ள கிடைக்கிறது. இதற்கு பிறகும் கட்டணங்கள் இருக்கும்.
இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதலாக அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) சலுகையும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதில் அப்பல்லோ சலுகையை மூன்று மாதங்களுக்கும், ஹலோ டியூன்ஸ் சலுகையை மாதத்துக்கு ஒன்று என்ற கணக்கிலும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஸ்பேம் அலெர்ட் சலுகை இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது.
ஜியோ ரூ 3599 திட்ட விவரங்கள் (Jio Rs 3599 Plan Details): ஜியோவில் டேட்டாவுடன் கூடிய வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், நீங்கள் இந்த திட்டத்தை மட்டுமே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு கம்மியான விலையில் ரூ 1748 திட்டம் கிடைக்கிறது. ஆனால், அதில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை மட்டுமே கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
அதேபோல 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டியில் டேட்டாவுடன் ஜியோ ரூ 3599 திட்டம் மட்டுமே ஆரம்ப விலையில் இருக்கிறது. வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது. ஆகவே, டேட்டாவுடன் மலிவான வருடாந்திர திட்டம் ஏர்டெல்லில் மட்டுமே கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications