நொறுக்கி விட்ட ஏர்டெல்.. மாதம் ரூ.187-க்கு 365 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 30 ஜிபி டேட்டா வருது!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தில் மலிவு விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டங்களில் இருக்கும் சலுகைகள் பலருக்கு தெரிவது கிடையாது. ஏனென்றால், மாதத்துக்கு ரீசார்ஜ் செய்யும் போதும், அந்த தொகையை வருடத்துக்கு கணக்கிட்டால், இப்போது கிடைக்கும் வருடாந்திர திட்டங்களைவிட அதிகமாக இருக்கும். இப்படி ஒரு திட்டம் மாதத்துக்கு ரூ.187 செலவில் கிடைக்கிறது. இதில் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது.
ஏர்டெல்லில் மலிவு விலைக்கு வாய்ஸ் கால்களுடன் திட்டம் வேண்டுமானால், ரூ.189 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்கு 21 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். அதேபோல 300 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால், இதே ஏர்டெல்லில் கிடைக்கும் ரூ.2249 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 12 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. இதற்கு ஒரு மாதத்துக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டு பார்த்தால், ரூ.187 மட்டுமே தேவைப்படுகிறது.
அதே நேரத்தில் ஒரு மாதத்துக்கு வேலிடிட்டியும் கிடைக்கும்படி இருக்கிறது. ஆகவே, ஏர்டெல் கஸ்டமர்கள் வாய்ஸ் கால்கள் மட்டும் போதும் என்று முடிவெடுத்துவிட்டால், ஒரே தடவையாக ஏர்டெல் ரூ.2249 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு அதிக சலுகைகள் மட்டுமல்லாமல், லாபத்தையும் கொடுக்கும்.
ஏர்டெல் ரூ.2249 திட்ட விவரங்கள் (Airtel Rs 2249 Plan Details): இந்த திட்டம் வாய்ஸ் ஒன்லி திட்டம் என்று நினைக்க வேண்டாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், லம்ப்-சம் டேட்டா சலுகையையும் கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 30 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இந்த டேட்டா சலுகை மொத்தமாக கிடைக்கும். ஆகவே, தினசரி லிமிட் இல்லாமல், தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். 365 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாக 30 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், அதன் பிறகு கட்டணம் செலுத்தி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்யலாம்.
ஆகவே, இதில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படாது. இந்த டேட்டா சலுகையை போலவே எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கும். அதாவது, மொத்தமாக 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டுவிடும். இதையும் 365 நாட்களில் தேவைப்படும்போது, லிமிட் ஏதும் இல்லாமல் பயன்படுத்தி கொள்ளலாம். முன்கூட்டியே முடிந்தால் கட்டணம் இருக்கும்.
இதற்கு அடுத்து முக்கியமான வாய்ஸ் கால்கள் சலுகை இருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) கால்கள் செய்ய கிடைக்கிறது. அதேபோல ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் இதில் கிடைக்கிறது.
டேட்டா சலுகைகள் கிடைத்தாலே அந்த திட்டத்தில் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். இதிலும் மூன்று கூடுதல் சலுகைகள் இருக்கின்றன. முதலில் ஸ்பேம் அலெர்ட் சலுகை கிடைக்கிறது. எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல், ஸ்பேம் வாய்ஸ் கால்கள் (Spam Voice Calls) மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்களுக்கு (Spam SMS) அலெர்ட் கொடுக்கப்படுகிறது.
இந்த சலுகைக்கு அடுத்து வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது. இதை 30 நாட்களுக்கு ஒருமுறை கஸ்டமர்களுக்கு மாற்றி கொள்ளலாம். இந்த சலுகைகள் போக பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த சலுகைகளையே மாதத்துக்கு ரூ.187 செலவில் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








