Airtel-க்கு பெரிய சல்யூட்.. மாதாந்திரம் ரூ.187 போதும்.. 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. இதுல விஐ புதுசு!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும்படியான ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலையிலேயே வோடபோன் ஐடியாவும் இப்போது, வருடாந்திர திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. இந்த திட்டங்களுக்கான மாதாந்திர செலவு வெறும் ரூ.187ஆக மட்டுமே இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா கிடைக்கிறது. ஒரே விலைக்கு கிடைப்பதால், இந்த திட்டங்களின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம். எதில் அதிக சலுகைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ 2249 திட்ட விவரங்கள் (Airtel Rs 2249 Plan Details): இப்போது, 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களே வருடாந்திர திட்டங்களின் கணக்கில் வந்துவிட்டது. ஆனால், இதில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 12 மாதங்கள் முழுவதும் வேலிடிட்டி மற்றும் சிம் ஆக்டிவ் கிடைக்கும். அதேபோல வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கிறது.

இதில் வாய்ஸ் கால்கள் மட்டுமே அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கும். மற்ற சலுகைகள் மொத்தமாக கொடுக்கப்படும். அதாவது, இந்த வருடாந்திர திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாள்தோறும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வருடம் முழுவதும் கொடுக்கப்படுகிறது. ஆனால், டேட்டா சலுகை நாளொன்றுக்கு கிடைக்காது.
மொத்தமாகவே 30 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகும் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படாது. ஆகவே, 30 ஜிபி டேட்டாவை 365 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாகவே பயன்படுத்தி முடித்தால், அதன்பிறகு டேட்டாவுக்கு கட்டணங்கள் இருக்கும். இதேபோல எஸ்எம்எஸ் சலுகைகள் மொத்தமாக 3,600ஆக கொடுக்கப்படும். இதையும் 365 நாட்களுக்கு முன்பாக முடித்தால் கட்டணம் இருக்கும்.
இந்த சலுகைகள் போக பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கூடுதலாக கிடைக்கிறது. இந்த சந்தாவும் திட்டத்தை போலவே 12 மாதங்களுக்கு கிடைக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கிற வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் ஸ்பேம் அலெர்ட் சலுகை கிடைக்கிறது. அதேபோல ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, இதில் கூடுதலாக 3 சலுகைகள் கிடைக்கின்றன.
வோடபோன் ஐடியா ரூ 2249 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 2249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் புதிதாக களமிறங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் விலை மட்டுமல்லாமல், சலுகைகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அதாவது, 365 நாட்கள் முழுவதும் இதிலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை கிடைக்கிறது. டேட்டா, எஸ்எம்எஸ் மொத்தமாக கிடைக்கிறது.
முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே மொத்தமாக 30 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கொடுக்கப்படவில்லை. எஸ்எம்எஸ் சலுகையும் அதேபோல இருக்கிறது. ஆகவே, மொத்தமாக 3,600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் மட்டுமே ஒரே மாதிரியாக இருக்கிறது. அதேபோல இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் இவை மட்டுமே கிடைக்கின்றன.
ஆகவே, ஏர்டெல்லில் கிடைத்ததை போல பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா, ஸ்பேம் அலெர்ட் சந்தா மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சந்தா போன்ற ஏதாவது ஒரு கூடுதல் சந்தா இதில் கிடைக்கவில்லை. விஐ மூவிஸ் & டிவி, டேட்டா டிலைஸ்ட் போன்ற பல்வேறு சலுகைகள் வோடபோன் ஐடியாவிலும் இருக்கிறது. ஆனால், இதில் கொடுக்கப்படவில்லை. இந்த திட்டங்களுக்கான மாத செலவு ரூ.187ஆக மட்டுமே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








