2026 க்கு Airtel அடிச்ச லாட்டரி.. மாதம் ரூ.187 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. 30GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஏர்டெல் நிறுவனத்தின் சிக்கனமான திட்டங்களுக்கு டெலிகாம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதில் மாதத்துக்கு ரூ.187 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் 2026 இல் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் சலுகைகள் 2025 ஆம் ஆண்டை போலவே மாற்றப்படாமல் கிடைக்கிறது.
2025 ஆம் ஆண்டில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) நிறுவனங்கள் கொடுக்க தொடங்கின. இப்படி மலிவான விலைக்கு திட்டத்தை கொடுத்த பிறகு 2025 ஆம் ஆண்டு இறுதியில் டெலிகாம் கட்டணங்களை உயர்த்தாமலேயே ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளை குறைத்தன.

1 ஜிபி டேட்டா திட்டங்களை நீக்கின. இதனால், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் சலுகைகளை மட்டுமே கொண்ட திட்டங்களின் சலுகையும் குறைக்கப்படலாம் என்று டெலிகாம் கஸ்டமர்கள் எண்ணினர். ஆனால், 2025 ஆம் ஆண்டில் கிடைத்தை போலவே 2026 ஆம் ஆண்டிலும் அதே விலையில் திட்டங்கள் கிடைக்கின்றன.
ஏர்டெல் ரூ.2249 திட்ட விவரங்கள் (Airtel Rs 2249 Plan Details): மாதம் ரூ.187 செலவில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டமாக இருக்கிறது. ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டியிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இது வாய்ஸ் கால்கள் திட்டமாக இருப்பதால், டேட்டா கொஞ்சமாகவே கொடுக்கப்படும்.
அதாவது, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 365 நாட்களுக்கும் 30 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். மேலும், 30 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். மேலும், 365 நாட்களுக்கும் 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும்.
மேலும், இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகைகளையும் இந்த ஏர்டெல் ரூ.2249 திட்டம் கொடுத்துள்ளது. 30 ஜிபி டேட்டாவும் வேண்டாம், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே போதுமானால், ஏர்டெல் ரூ.1849 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதிலும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், டேட்டா கிடைக்காது.
இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை பெற்று கொள்ளலாம். 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் இலச ஹலோ டியூன்ஸ் கிடைக்கும். ஸ்பேம் அலெர்ட் சலுகையையும் இந்த ஏர்டெல் ரூ.1849 திட்டம் கொடுத்துள்ளது.
தினசரி டேட்டாவுக்கு ஏர்டெல் ரூ.3599 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவை மட்டுமல்லாமல், மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கொடுக்கப்படும். 2 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
100 எஸ்எம்எஸ்களை இந்த ஏர்டெல் ரூ.3599 திட்டம் கொடுத்துள்ளது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களையும் கொடுத்துள்ளது. மேலும், இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகைகளையும் கொண்டுள்ளது. இதைவிட அதிக டேட்டாவுடன் ஏர்டெல் ரூ.3999 திட்டம் ரீசார்ஜ் செய்து கொள்ள கிடைத்துள்ளது.
365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களும் இந்த ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications








