Airtel ஜனவரி - டிசம்பர் திட்டம்.. விவரம் தெரிஞ்சவங்க வாய்ஸ் பேக் பக்கம் போமாட்டாங்க.. நேரா இந்த பிளான் தான்..
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) வெளியிட்ட அறிவுறுத்தலின் படி, ஏர்டெல் (Airtel) நிறுவனம் சமீபத்தில் 84 நாட்கள் மற்றும் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வாய்ஸ் மற்றும் SMS ஒன்லி திட்டங்களை அறிமுகம் செய்தது. இத்துடன் மலிவு விலை விருப்பமாக 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஆள்-இன்-ஒன் திட்டத்தையும் (Airtel 365 days all-in-one plan) ஏர்டெல் தற்சமயம் வழங்கியுள்ளது. இந்த திட்டம் 365 நாட்களுக்கு டேட்டா (data), வாய்ஸ் (voice), SMS நன்மையுடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டம் பற்றிய கூடுதல் விபரம் இதோ.
ஏர்டெல் (Airtel) நிறுவனம் தற்போது வழங்கி வரும் இந்த புதிய ஏர்டெல் 365 நாள் ஆள்-இன்-ஒன் திட்டம் ஒரு சிறந்த ப்ரீபெய்ட் திட்டமாக (Best Airtel 365 Day Plan) பார்க்கப்படுகிறது. காரணம், இந்த ஒரு திட்டத்தை நீங்கள் 2025 ஜனவரியில் இப்போது ரீசார்ஜ் (recharge) செய்தால், அடுத்த 2026 ஜனவரி வரை, இடையில் வேறு எந்தவொரு ரீசார்ஜ்ஜும் உங்களுக்கு தேவைப்படாது என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

Airtel ஜனவரி - டிசம்பர் திட்டம்.. விவரம் தெரிஞ்சவங்க வாய்ஸ் பேக் பக்கம் போமாட்டாங்க:
நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் ஏர்டெல் திட்டமானது, ஏர்டெல் ரூ. 2,249 திட்டம் (Airtel Rs 2249 Plan) என்ற பெயருடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் (365 days validity plan) 1 முழு வருட நீண்ட நாள் திட்டமாக ரீசார்ஜ் (Airtel 1 year long term validity plan) செய்ய கிடைக்கிறது.
இந்த திட்டம் 1 வருடத்திற்கு எந்தவித தடையுமின்றி அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி டேட்டா நன்மையை (daily data benefit) வழங்குவதற்கு பதிலாக, எந்தவித வரம்பும் இல்லாத 30GB ஹை-ஸ்பீட் டேட்டா (30GB high speed data) நன்மையை வழங்குகிறது. ஒருவேளை உங்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் மட்டும், நீங்கள் ஏர்டெல் டேட்டா வவுச்சர்களை (Airtel data voucher) வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.
ஏர்டெல் ரூ. 2,249 திட்டம் (Airtel Rs 2249 Plan):
இந்த திட்டம் 3600 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது. இது வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் (Airtel voice only plan) கிடைக்கும் எஸ்எம்எஸ் நன்மை போல் சிலருக்கு தெரியலாம். 365 நாட்களுக்கு தினசரி வரம்பு எதுவும் இல்லாமல் 3600 SMS (3600 SMS benefit) கிடைப்பது போதுமானதாக இருக்கலாம். ஒருவேளை இந்த திட்டம் உங்களுக்கு அதிக விலை கொண்ட திட்டமாக தோன்றினால், ஏர்டெல் தற்போது மற்றொரு மலிவு விலை விருப்பத்தை வழங்குகிறது.
ஏர்டெல் ரூ. 929 திட்டம் (Airtel Rs 929 Plan):
அது தான் ஏர்டெல் ரூ. 929 திட்டம் (Airtel Rs 929 Plan). இந்த திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (Airtel 90 days validity plan) உடன் வருகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினசரி 1.5GB டேட்டா நன்மை (1.5GB data per day plan) மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.
இத்துடன் கூடுதல் இலவச நன்மையாக ஏர்டெல் வழங்கும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா (Airtel XStream Play subscription) நன்மையும் கிடைக்கிறது. இது 22 வகையை OTT சேனல் (OTT channels) உள்ளடக்கத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








